தோல்வி பயம் பா.ஜ.க.வைத் துரத்துகிறது! மணிப்பூர் – மேகாலயா மாநிலங்களில் பா.ஜ.க. போட்டியிடவில்லை

viduthalai
1 Min Read

 

இம்பாலா, மார்ச் 24 : 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி வட கிழக்கு மாநிலங்களில் போட்டியிடா மல் விலகுவது வரலாற்றில் முதல் முறையாகும்.
மக்களவைத் தேர்தல் தொடங் குவதற்கு முன்பே பாஜக தன் தோல்வி பயத்தை தன் செயல்களின் மூலம் காட்டுகிறது.
மணிப்பூரை எரித்து தன்னை முழுவதுமாக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக, வடகிழக்கு மக்களை எதிர்கொள்ளப் பயப் படுகிறது
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் போட்டியிடு வது இல்லை என பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங் களில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மேகாலயாவில் இரண்டு மக் களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் தேசிய மக் கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு ஆதரவு அளிக் கப்படும் எனத் தெரிவித்துள்ளது. நாகாலாந்தில் தேசியவாத குடியரசு முற்போக்கு கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித் துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர் சம்பித் பத்ரா ‘எக்ஸ்’ தளத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தலின்படி, இந்தத் தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித் துள்ளார்.
2019 ஆம் ஆண்டு மேகாலயா வில் உள்ள இரண்டு இடங்களிலும், மணிப்பூரில் ஒரு இடத்திலும் பாரதீய ஜனதா போட்டியிட்டது. ஆனால் மூன்று இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.
மணிப்பூரில் இரண்டு பிரிவின ருக்கு இடையிலான மோதலால் ஏற்பட்ட அரசியல் விளைவால்தான், பாரதீய ஜனதா இந்த முடிவு எடுத் துள்ளது. மேலும் மூன்று மாநிலங் களிலும் ஆதரவு அளிக்கும் இடங் களில் கிறிஸ்தவர்களின் வாக்குகள் அதிகம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கூறப் படுகிறது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது; மேகாலயா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆதரவு கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *