புதுடில்லி, நவ 22- பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
விசாரணை செய்த உச்சநீதி மன்றம் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறு வனத்திற்கு கண்டனம் தெரிவித் தது. ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.
நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது. இந்த விளம்பரங்களில் தவறான தகவல் கள் கூறப்பட்டன, அதே நிலையில் அவர்களது நிறுவனம் தரமற்ற தயாரிப்புகளை தருவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வந்தது இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத் தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசா ரணைக்கு நடைபெற்றது
அப்போதுஆங்கில மருந்து களை குறிவைத்து தவறான விளம் பரங்களை வெளியிட்டதற்காக பதஞ் சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இது போன்ற தவறான விளம்பரங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத் தப்பட வேண்டும். அத்தகைய மீறலை உச்சநீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.
தவறான விளம்பரங்கள் நீடித் தால் ரூ.1 கோடி அபராதம் விதிக் கப்படும். இந்த அபராதம் ஒவ் வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள உச்சநீதிமன்றம், எதிர்காலத்தில் பத்திரிகைகளில் அறிக்கைகளில் வெளியிடும் செய்திகளை பதஞ்சலி நிறுவனம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
கருப்புப்பணச்சாமியார் ராம் தேவ் பாபா 2005ஆம் ஆண்டு சாதாரண யோகா ஆசிரியராகவும் உத்தராகாண்டில் சிறிய வயல் வெளி ஊடாக குடில் ஒன்றை அமைத்து யோகா மற்றும் நாட்டு மருந்துகளை விற்பனை செய்து வந்தார்.
2011ஆம் ஆண்டிலிருந்து மோடியை ஒன்றியத்தில் ஆட்சிக்கு கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மறைமுக திட்டத்தில் இவரும் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து மன்மோகன் சிங் ஆட்சிக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திய ஊழல் நாடகப்போராட்டத்தின் மூலம் இவரும் பிரபலமானார். டில்லி ஜந்தர் மந்தர் பகுதி போராட்டத்தின் போது காவல் துறையினர் கைதுசெய்யவருவதை அறிந்துகொண்டு பெண்களின் ஆடைகளை அணிந்துகொண்டு முகத்தை மூடிக்கொண்டு தப்பித் தார்.
இந்த நிலையில் மோடி ஆட் சிக்கு வந்த பிறகு இவரது சொத்து மதிப்பு அம்பானி அதானிகளுக்கு இணையாக மாறியது.
அரியானா மாநில அரசு கல்விக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு இணையாக இவருக்கு பள்ளிகளில் யோகா பயிற்சி என்ற பெயரில் வழங்கியது. ஹிந்துத்துவம் ஹிந்து கலாச்சாரம் என்ற பெயரில் இவர் மதவெறுப்பை விதைத்து அதன் மூலம் மக்களிடையே தன்னுடைய பொருட்களைக்கொண்டு சென்று லாபம் பார்க்கிறார் என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.