அந்தோ, பரிதாபம்!

viduthalai
3 Min Read

அந்தோ, பரிதாபம்!
ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியாம்

சென்னை,மார்ச் 23- நாடாளுமன்ற தேர்தலில் ராம நாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட போராட்டம் தொடர்கிறது. தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் மட்டும் நின்று போட்டியிடுகிறேன். களத்தில் நின்று வென்று காட்ட முடி வெடுத்துள்ளேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கருத்து வேறு பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். நிறைய தொகுதிகள் கொடுக்க முன்வந்தும் இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்.
– இவ்வாறு அவர் கூறினார்.

பல்வேறு கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

தமிழ்நாடு

சென்னை, மார்ச் 23- சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சிறீதர் வாண்டையார், முக்குலத்தோர் புலிப் படை கட்சியின் தலைவர் கருணாஸ், ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன், தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர்
எஸ்.ஆர்.பாண்டியன், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் பொன்.முருகேசன், நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் விருகை வி.என்.கண்ணன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பேரறிவாளன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் ஆகியோர் தங்கள் இயக்க நிர்வாகிகளுடன் 21.3.2024 அன்று சந்தித்தனர். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? என்பது குறித்து, முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மத நல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க ‘இந்தியா’ கூட்ட ணியை 2024 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.க.வை. முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.’ என்று கூறியுள்ளார்.

வாட்ஸ்அப்பில் ‘விக்சித் பாரத்’ விளம்பரங்களுக்கு தடை
தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடில்லி, மார்ச் 23- 2047ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குவது எப்படி அதற்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது எப்படி என்பது குறித்து கருத்து கேட்கும் வகையில் ‘விக்சித் பாரத்’ விளம்பரங்கள் வாட்ஸப் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது.
பாஜக மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி குறித்த பெருமைகள் அடங்கிய கடிதத்துடன் ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்படும் இந்த வாட்ஸப் தகவல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 16-3-2024 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய குடிமக்களுக்கு‘WhatsApp’ மூலம் தொடர்ந்து விக்சித் பாரத் குறித்த தகவல் அனுப்பப் படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதனையடுத்து இதுபோன்ற குறுஞ்செய்திகள் வெளியிடப்படாமல் நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
கோவை தொகுதி

தி.மு.க. வேட்பாளர் அறிமுகம் கூட்டம்
திராவிடர் கழகம் பங்கேற்பு

கோவை, மார்ச் 23- கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்கள் சு.முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் கோவை தொகுதி இந்தியா கூட்டணி கட்சி களின் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் திமுக கோவை தொகுதி வெற்றி வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் அவர்களுக்கு பய னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன், கழக சொற்பொழிவாளர் புலியகுளம் க.வீரமணி, குறிச்சி பகுதி செயலாளர் தெ.குமரேசன், தொழிலாளர் அணி பொறுப்பாளர் வெங்கடாசலம், தோழர் நா.குரு,
ஜீ.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம்,பெரியார் புத்தக நிலைய காப்பாளர் அ.மு.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *