பரமத்திவேலூர், செப். 25- நாமக்கல் மாவட்டத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகில் 17.9.2023 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது.
இந்தியாவில் புதிய எதிர்க்கட்சி ‘இண்டியா’வின் தமிழ்நாடு அமைப்பின் (இந்தியா)விலேயே முதல் கூட்டமாக அமைந்தது. ‘இண்டியா’ தமிழ்நாடு அமைப்பின் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.கு.குமார் வரவேற்புரை யாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் இளங்கோ தொடக்கவுரையாற்றி னார். பெரியார் அறக்கட்டளைத் தலைவர் க.சண்முகம் அவர்கள் தலைமையுரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வீரமுருகன், திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.அசென் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வி.எஸ்.பரமசிவம், கபிலர் மலை மதிமுக ஒன்றிய செயலாளர் வி.ஏ.மணி, திமுக அயலக அணி சி.எம்.மணி, சிபிஅய்எம் மாநிலக் குழு கே.தங்கமணி, வேலூர் பேரூர் திமுக நகர செயலாளர் பி.முருகன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் மருத அறிவாயு தம், வேலூர் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் முத்துக்கண்ணன், மதிமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் த.பவுன்ராஜ், மதிமுக வேலூர் நகர செயலாளர் ஏ.அன்பழகன், வழக்குரைஞர் பாலகிருட்டிணன் (திமுக) ஆகி யோர் கருத்துரையாற்றினார்கள்.
கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் கலந்து கொண்டு மழைக் கிடையே சிறப்புரையாற்றினார். பொதுமக்களும், கழக தோழர்க ளும் மிகவும் பாராட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
மேலும் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகச் செய லாளர் வழக்குரைஞர் வை.பெரிய சாமி, திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் பொன்னு சாமி, பொத்தனூர் கழக தலைவர் அன்புமணி, பரமத்தி ஒன்றிய கழக செயலாளர் செங்கோடன், பள்ளி பாளையம் ஒன்றிய தலைவர் சீனிவாசன், கரூர் மாவட்ட கழக தலைவர் குமாரசாமி, மாவட்ட செயலாளர் காளிமுத்து மற்றும் கரூர், நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தனர். குமாரபாளையம் கழக நகரத் தலைவர் சு.சரவணன் கூட் டத்தில் கலந்து கொண்ட அனை வருக்கும் நன்றி கூறினார்.