பணி ஓய்வுக்கு பின் பயனளிக்கும் மருத்துவக் குழுக் காப்பீட்டு திட்டம் எல்அய்சி அறிமுகம் செய்தது

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 9- பணி ஓய்வுக்குப் பின் மருத்துவ செலவுப் பயனளிக்கும் குழுக் காப்பீட்டுத் திட்டத்தைக் கடந்த மே 2-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள் ளது  எல்அய்சி ஆஃப் இந்தியா. இது பங்குச் சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்குகொள்ளாத, ஆயுள், குழு சேமிப்பு காப்பீட்டுத் திட்டமாகும். தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர் களுக்குப் பணி ஓய்வுக்குப் பிந்தைய மருத்துவப் பயன்களை அளிக்க இத் திட்டம் உதவுகிறது. மேலும் ஒவ்வோர் உறுப்பினருக்கும் குறிப்பிட்ட ஆயுள் காப்பீட்டுப் பயனையும் இத்திட்டம் அளிக்கிறது. 

ஊழியர்களுக்கு இத்தகைய பயனை அளிக்க விரும்பும் தொழில் நிறுவ னங்கள் இத்திட்டத்தைப் பெறலாம். 50 மற்றும் அதற்கு மேல் ஊழியர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்கள் இத் திட்டத்தில் சேரலாம். 

எல்அய்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *