22.11.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
👉 அர்ஜெண்டினா நாட்டின் தலைவராக வலது சாரி சிந்தனையாளர் ஜாவியர் மிலய் வெற்றி.
👉குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்: ராஜஸ்தான் காங். தேர்தல் அறிக்கை
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து பீகாரில் இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தி அரசிதழில் வெளியீடு: நிதிஷ் அரசு நடவடிக்கை.
👉 மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வெறுப்பை பரப்பும் ஆர்எஸ்எஸ்-பாஜக, ராகுல் விமர்சனம்.
👉 ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூக சமத்துவத்தை வளர்க்கும் என்று ஆந்திராவின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பேச்சு.
தி டெலிகிராப்:
👉யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்பு மூலம் பல்வேறு நோய்களுக்கு நிரந்தர நிவாரணம் வழங்குவதாக பொய்யான விளம்பரங்களுக்காக ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 பிரதமரின் மோடி ஜாதிப்பிரிவு ‘திருட்டுத்தனமாக’ ஓபிசி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார் கார்கே. ஜாதிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் மோடியின் தற்போ தைய நிலைப்பாட்டிற்கு முரணானது என்றும் கண்டனம்.
👉 கடும் எதிர்ப்பின் காரணமாக ’பார்ப்பனர்களுக்கு மட்டும் தகனம் செய்யும் சுடுகாடு’ என்கிற பலகையை அகற்றியது ஒடிசா மாநில கேந்திரபாடா நகர நிர்வாகம்.
👉 தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டன, அரசு அறிவிப்பு.
– குடந்தை கருணா