சென்னை, மார்ச்.22-அரவிந்த் கெஜ்ரிவால் கைது நட வடிக்கையால் பா.ஜனதா வுக்கு எவ்வித பயனும் இல்லை என்றும், ‘இந் தியா’ கூட்டணியின் வெற்றி உறுதியாகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
கைது
நேற்று (21-3-2024), தி.மு.க. தலைவர், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட் டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது,
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத் தில், தனது பத்தாண்டு ஆட்சியின் அவலங்களை நினைத்தும், தோல்வி உறுதியாகியுள்ளதாலும் அஞ்சி நடுங்கும் பாசிச பா.ஜ.க அரசு, சகோதரர் ஹேமந்த் சோரனைத் தொடர்ந்து, இன்று மாண் புமிகு டில்லி முதலமைச் சர் திரு. அரவிந்த் கேஜ்ரிவாலைக் கைது செய்து, அருவருக்கத்தக்க நிலைக் குத் தரந்தாழ்ந்துள்ளது.
ஒரே ஒரு பா.ஜ.க தலைவர் மீது கூட விசார ணையோ கைது நடவடிக் கையோ இல்லை என்ப தில் இருந்தே அவர்களின் அதிகார அத்துமீறலும், ஜனநாயகச் சிதைப்பும் அப்பட்டமாகிறது.
எதிர்க்கட்சித் தலை வர்கள் மீதான இத்தகைய தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகள் அவர் களை பா.ஜ.க அரசு குறி வைத்து வேட்டையாடு வதை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.
வெற்றி உறுதி
இந்த கொடுங்கோன்மை பா.ஜ.க.வின் முகத்தி ரையை முற்றிலுமாகக் கிழித்தெறிந்து மக்களி டம் சீற்றத்தைத் தூண்டி யுள்ளது. ஆனால் இந்தக் கைது நடவடிக்கைகளால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக, நாங்கள் மேலும் உறுதி யடைகிறோம். ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி உறுதியாகிறது.
மக்களின் சினத்தை எதிர்கொள்ளத் தயாராக இரு பா.ஜ.க.வே!
-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கு. செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய் யப்பட்டிருப்பதை விட ஒரு ஜனநாயகப் படு கொலை எதுவும் இருக்க முடியாது. ஏற்கெனவே ஜார்கண்ட் மாநில முதல மைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அதன் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று பா.ஜனதா சதித் திட்டம் தீட்டியது. ஆனால் மீண் டும் அங்கே ஆட்சி காப் பாற்றப்பட் டிருக்கிறது. அமலாக்கத் துறையின் இத்தகைய அடக்குமுறை களை வன்மையாக கண் டிக்கிறேன். பா.ஜனதா வின் அடக்கு முறைக்கு முடிவு கட்ட 2024 மக்க ளவை தேர்தலை நாட்டு மக்கள் சரியாக பயன்படுத் திக் கொண்டு இந்தியா கூட் டணியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக் கிறது” என்று தெரிவித்துள்ளார்.