ஜக்கியின் ஈசா யோகா மய்யத்திற்குச் சென்ற 6 பேரைக் காணவில்லை
சென்னை, மார்ச் 22 ஈஷா யோகா மய்யத்தில் பணியாற்றிய வர்களில் இது வரை 6 பேர் காணாமல் போய் உள்ள தாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தில், தென்காசி மாவட்டம் குலசேகர பட்டியை சேர்ந்த விவசாயி திருமலை, காணாமல் போன தன்னுடைய சகோ தரரை மீட்டு தரக் கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், ‘என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோவையில் உள்ள ஈஷா யோகா மய்யத்தில் கடந்த 2007ஆ-ம் ஆண்டு முதல் தன் னார்வலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி, ஈஷா யோகா மய்யத்தில் இருந்து என்னை தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா?’ என கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மய்யத்துக்கும் அவர் வரவில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி ஈஷா யோகா மய்ய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலை யத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த ஆலாந்துறை காவல்துறை ஓராண்டு கால மாகியும் அந்த வழக்கில் மந்த மான விசாரணை நடத்துகிறது. எனவே, காவல் துறை விசா ரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன என் சகோ தரர் கணேசனை மீட்டு, நீதி மன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (21.3.2024) விசாரணைக்கு வந் தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ராஜ்திலக், ‘கடந்த 2016ஆ-ம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில், இதுவரை 6 பேர் காணாமல் போய் உள்ளனர். இதுகுறித்து விசா ரணை நடைபெற்று வரு கிறது’ என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண் டும். இது தொடர்பாக உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.