சென்னை,மார்ச் 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது, கடலூர் மாவட் டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் 2002இல் 49 சதவீதத்தையும், 2006இல் 10 சதவீதத்தையும், 2013இல் 5 சத வீதத்தையும் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முயற்சித்தது.
ஆனால் இதை எதிர்த்து முன் னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக இவை தடுக்கப்பட்டன. இருப்பினும் தொடர் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை மீறியும் சிறுக, சிறுக 20 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது 7 சத வீத பங்குகள், சலுகை விற்பனை என்ற அடிப்படையில் ரூ.226 விலையுள்ள பங்கை ரூ.212-க்கு விற் பதற்கு ஒன்றிய அரசு அறிவித்துள் ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள 9 கோடிக்கும் அதிகமான இப்பங்கு களை பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களால் தான் வாங்க முடியும்.
மேலும் ரூ.2 ஆயிரம்கோடி நிதி தேவைக்காக, ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி தரும் நிறுவனத்தின் பங்குகளை விற் பனை செய்வது என்பது பொதுத் துறை நிறுவனத்தை தனியார் மய மாக்கும் முயற்சியாகும்.
எனவே இந்திய நாட்டின் மின் தேவையில் முக்கிய பங்காற்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 7 சதவீத பங்குகள் விற்பனை அறிவிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.