அக்டோபர்-6 தஞ்சாவூர் திலகர் திடலில். திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூகநீதிக்கான சரித்திரநாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா – திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவின் துண்டறிக்கையை திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாண சுந்தரத்திடம் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி. அமர்சிங், மாநில கிராம பிரச்சார செயலாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தலைமை கழக அமைப் பாளர் க.குருசாமி, குடந்தை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி குடந்தை மாவட்ட செயலாளர் சு. துரைராஜ் , பொதுக்குழு உறுப்பினர் சு. விஜயகுமார் கும்பகோணம் நகர செயலாளர் வழக்குரைஞர் ரமேஷ் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என். கணேசன் ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் பட்டீஸ்வரம் நகரத் தலைவர் அ.இளவழகன் பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக்குமார் ஆகியோர் வழங்கி மகிழ்ந்தனர்
மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு நிகழ்ச்சி சிறக்க பெருமளவில் தோழர்களுடன் பங்கேற்பதுடன் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தார் (26-092023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கல்யாணசுந்தரத்திடம் தொலைப்பேசியில் நிகழ்ச்சி குறித்து உரையாடினார்.