புதுடில்லி, மார்ச் 18- மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப் ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல கோடிகளை வழங்கியது குறித்து மூத்த வழக் குரைஞர் பிரஷாந்த் பூஷன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.980 கோடிகளை வழங்கி உள்ளது. இது இந்தியாவில் அதிக தொகையை நிதியாக வழங்கிய இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகும். அதே நிறுவனம் மங்கோலியாவில் ரூ.5400 கோடி பசுமை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை இந்தியா சார்பாக பெற்றது.
மேலும், அதே நிறுவனம் ரூ.3681 கோடி மதிப்புள்ள மும்பை புல்லட் ரயில் நிலையத் திட்டத் திற்கான ஒப்பந்தத்தையும் பெற் றது.
ரூ.38,000 கோடி மதிப்பிலான காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட் டத்தில் பெரிய அளவில் முறை கேடுகள் நடந்திருப்பதாக சமீ பத்தில் சிஏஜி சுட்டிக் காட்டியது. இந்த நிறுவனம்தான் இந்த திட்டத்தின் முக்கிய ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப் படி பல ஒப்பந்தங்களை பெற்ற நிறுவனம் நிதியாக யாருக்கு இவ் வளவு கோடிகளை அள்ளிக் கொடுத்தது என்ற கேள்வி எழுந் துள்ளது.
சந்தேகம் வருகிறது
இந்த நிலையில் மேகா இன் ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட் ரக்சர் லிமிடெட், தேர்தல் பத் திரங்கள் மூலம் பல கோடிகளை வழங்கியது குறித்து மூத்த வழக் குரைஞர் பிரஷாந்த் பூஷன் கேள்வி எழுப்பி உள்ளார்.
11 ஏப்ரல் 2023 அன்று, Electoral Bondsஇல் 100 கோடிகளை மேகா இன்ஜினியரிங் யாருக்கோ வழங்கி உள்ளது?
ஆனால் இருந்த நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்கிய 1 மாதத் திற்குள் பாஜக ஆளும் மகா ராட்டிரா அரசிடம் இருந்து
ரூ. 14,400 கோடி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம். SBI பத்திர எண்களை தகவலில் இருந்து மறைத்திருந்தாலும், சில நன்கொடையாளர்கள் மற்றும் கட்சிகளின் “மேட்சிங்கை” யூகிக்க முடியும். பெரும்பாலான நன் கொடைகள் மீதான சந்தேகம் எழுகிறது.
தேர்தல் பத்திர தடை
நாடு முழுக்க தேர்தல் பத்திரங் களை உச்ச நீதிமன்றம் தடை செய் துள்ளது. இந்த தேர்தல் பத்திர தீர்ப்பு என்பது மொனோபாலி தொழிலதிபர்களுக்கும், அரசியல் கட்சிகளை தாஜா செய்து வந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும் விழுந்த ஒரு அடியாகும்.
இதுவரை அவர்கள் கொடுத்த.. கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்தி ரங்களின் தரவுகள் வெளிவந்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத் தனர் என்ற மொத்த விவரமும் அம்பலப்படுத்தப்படும்.
எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருந்தது.. அதனால் எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது எல்லாம் வெட்ட வெளிச் சமாக தெரிந்து விடும். அரசியல் வர்க்கமும் தொழில்துறையும் இந்த தீர்ப்பால் தடம் புரண்டு உள்ளன என்றுதான் கூற வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் செயல்படும் முறை
கடந்த 2018ஆம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது.
தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனு மதிக்கும் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமக னும் அல்லது நாட்டில் இணைக் கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத் திரங்களை வாங்கலாம்.
இந்த பத்திரங்கள் ரூ.1,000 முதல் ரூ. 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக் கின்றன-. மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளை களிலும் பெறலாம்.
இந்த நன்கொடைகளுக்கு வட் டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.
சலுகை
தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தர விட்டாலும் முக்கியமான சலுகை ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. அதன்படி தேர்தல் பாத் திரங்களை பயன்படுத்தி நிதி கொடுத்த நிறுவனங்கள் பெயர் களை வெளியிட வேண்டும்.
அவர்கள் கொடுத்த பணத்தை வெளியிட வேண்டும். அதேபோல் எந்தக் கட்சி எல்லாம் பணம் பெற்றனர் என்றும் வெளியிட வேண்டும்.
ஆனால், எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று சலுகை கொடுத்துள்ளது.