“இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயிர் காப்பீடு திட்டம் சீரமைக்கப்படும் !

2 Min Read

விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி பேச்சு

நாசிக், மார்ச்.15- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயிர் காப்பீடு திட்டம் சீர மைக்கப்படும் என்று விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உறுதி அளித் தார்.
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் ராகுல்காந்தி கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய பாரத ஒற்றுமை நீதி நடைப் பயணம்’ தற்போது மராட் டியத்தில் நடந்து வருகிறது. நேற்று (14.3.2024) அவர் நாசிக் நகரில் ரோடுஷோ நடத்தி னார். தெருமுனைகளில் நின்ற படி மக்கள் மத்தியில் பேசி னார்.
அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ராகுல்காந்தி பேசினார். இதுபற்றி அவர் கூறுகையில், “நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள், பிற் படுத்தப்பட்டவர்கள், பழங் குடி யினர். சிறுபான்மையினர், விவசாயிகள் தொழி லாளர்கள் ஆவர். அவர்க ளுக்கு அரசு, பெருநிறுவ னங்கள், தனியார் நிறுவனங் களில் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். அப்போது தான் உங்களின் பலம் தெரியும். இதை நீங்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்துங்கள்” என்றார்.

விவசாயிகள் பொதுக்கூட்டம்
முன்னதாக நாசிக் மாவட் டம் சந்தவாட்டில் நடந்த விவசாயிகள் திரளாக பங் கேற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது,
“இந்தியா” கூட்டணி ஆட் சிக்கு வந்தால் எங்களது அரசு விவசாயிகளின் குரலாக இருக்கும். எங்களது கூட்டணி அரசின் கதவுகள் விவசாயிகளுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். விவசாயிகளை பாதுகாக்க உறுதி யான கொள்கைகள் வகுக்கப் படும். விவசாயிகள் அதிக பயன்பெறும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தை மறுசீர மைப்போம். விளைபொருட் களின் விலையை பாதுகாக்க உறுதியான ஏற்றுமதி, இறக் குமதி கொள்கைகளை வகுப் போம். விவசாயத்தை ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கி ஒரே வரியாக கொண்டுவர முயற்சிப்போம்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும்

ரூ.70 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி
எங்களது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட் சியில் இருந்தபோது விவசாயிகளின் ரூ.70 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய் தோம்.அக்னி பாத் வீரர்கள் ஓய்வூதியம் மற்றும் தியாகி அந்தஸ்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 6 மாதங்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப் படுகிறது. -இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

சரத்பவார் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், உத்தவ் பாலா சாகேப் தாக்கரே சிவசேனா மூத்ததலைவர் சஞ்சய்ராவத் எம்.பி. கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளரு மான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது, “எதிர்க்கட்சிகள் கூட் டணி ஆட்சி அமைத்தால் விவசாய பயிர் கடன் தள் ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடன் தள்ளு படி அளவை தீர்மானிக்க தனி ஆணையம் அமைக்கப்படும். புதிய பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்படும். அது காப் பீட்டு நிறுவனங்களின் நலனுக் காக இருக்காது. விவசாயம் சார்ந்த பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பில் இருந்து விலக்க ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *