முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை!
வடக்குத்து, மார்ச் 14- வடக்குத்து அண்ணா கிராமம் தந்தை பெரியார் படிப்பகம், விடுதலை வாசகர் வட்டம் 89 ஆவது சிறப்பு நிகழ்ச்சியாக மாவட்ட கழக மகளிர் அணியினர் உலக மகளிர் நாள் நிகழ்வை 8.3.2024 அன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடத்தினர்.
மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் செ.முனியம் மாள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்தியவதி வரவேற்று பேசினார். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் குண சுந்தரி முன்னிலை வகித்தார். மகளிர் உரிமை மற்றும் பெண் விடுதலைக்கு பெரியார் ஆற் றிய பங்களிப்பு – அன்னை நாகம் மையார் – அன்னை மணியம் மையார் ஆகியோர் தொண் டின் கனிவு குறித்து எல்லாம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் விளக்கிப் பேசி சிறப்புரையாற் றினார்.
மற்றும் தேவிகா, சிவ ரஞ்சனி, சுமலதா, திராவிட மணி, கலைச்செல்வி, மங்கலட் சுமி, வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், மாவட்ட தலைவர் தண்டபாணி ஆகி யோரும் உரையாற்றினர்.
நிகழ்வில் மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வடலூர் கழக அமைப்பாளர் முருகன், இந்திரா நகர் கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் ஆகி யோர் பங்கேற்று சிறப்பித்தனர். மகளிருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுப் பொருள் கள் வழங்கப்பட்டது. நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.