தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்

2 Min Read

சென்னை, மார்ச்.14 தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் நாட்டில்15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை ஆணை யர் 12.3.2024 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

புதிய குடும்ப அட்டைகள்
பொது வினியோகத்திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் வாயிலாகப் பெற்று பயனுறும் வண்ணம் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து வினி யோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 7.5.2021 முதல் 30.6.2023 வரையில் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன.
நடப்பில் உள்ள குடும்ப அட் டைகள் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகள் வழங்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலை யில் பயனாளிகள் எண்ணிக்கையை சமநிலையில் வைக்கும் வண்ணம் குடும்ப அட்டைகள் வினி யோகம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இடையில் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியா குமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் 27 ஆயிரத்து 577 குடும்ப அட் டைகள் வழங்கப் பட்டன.

கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல்
ஏற்கெனவே இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க் கப்பட்டு தகுதியுடைய 45 ஆயிரத்து 509 புதிய குடும்ப அட்டைகள் தற்போது வழங்கப் படுகின்றன. இவர்கள் அனை வருக்கும் அவர்கள் கொடுத்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் புதிய குடும்ப அட் டைகளை வட்ட வழங்கல் அலு வலகங்களில் தாங்களோ, தங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனுமோ சென்று பெற்றுக்கொள்ளலாம்.
இந்த குடும்ப அட்டைதாரர் களிடம் சேருவதற்கு முன்னரே அட்டைதாரர்கள் அவர் களுக்கான இன்றியமையாப் பண் டங்களை நியாயவிலைக்கடை களில் பெறும் வகையில் குடும்ப அட்டைகள் செயலாக்கம் செய்யப் பட்டுள்ளன. அந்த விவரம் குடும்ப அட்டை எண்ணுடன் அட்டை தாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள் ளது. குடும்ப அட்டை எண்ணை கடைப் பணியாளரிடம் தெரிவித்து விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின்னர் நியாய விலைக் கடையில் அவர்களுக்கான இன்றியமையாப் பண்டங்களை அட் டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
-இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *