வைகோ கண்டனம்
சென்னை, மார்ச் 11 என்எல்சி நிறுவன பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் நேற்று (10.3.2024) விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வரும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 79.2 சதவீத பங்குகளை ஒன்றிய அரசு வைத் திருக்கிறது.
இதில் 7 சதவீத பங்குகளை ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது எனவும், இந்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.2,000 கோடி முதல் ரூ.2,100 கோடி வரை நிதி திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2002-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் என்எல்சி நிறுவனத் தின் 51 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தொழி லாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் என்எல்சி தனியார் மயமாகாமல் தடுக்கப்பட்டது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, என்எல்சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை தரு கிறது. இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.