சென்னை, மார்ச் 9- விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான புரிந் துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: டிட்கோ நிறுவனம் மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனம் இணைந்து கடந்த 6.3.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற் பத்திப் பிரிவை தொடங்குவதற்குமான வழிமுறைகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.
இதன்படி, விண்வெளித் துறை முன்னேற்றத்துக்காக டிட்டோ-வால் திறன்மிகு மய்யம் அமைக்கப் படவுள்ளது. இதில் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்தத் தேவையான உதவிகளை இன்-ஸ்பேஸ் நிறுவனம் அளிக்கும். டிட்கோ மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவ னத்துடன் செய்யப்பட்டுள்ள புரிந் துணர்வு ஒப்பந்தமானது, விண்வெளித் துறையில் புத்தாக்க விண்கலம், ராக்கெட் மற்றும் உதிரிப் பாகங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவ மைப்பு, தயாரிப்பு போன்றவற்றுக்கும் பெரிதும் உதவும்.
உலக விண்வெளி தொழில் துறையில் தமிழ்நாடு மிகச்சிறந்த முனையமாக உருவெடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். புரிந்துணர்வு ஒப்பந்த மானது, இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் பவன்குமார் கோயங்கா, அரசின் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் முன்னிலையில் கையொப் பமானது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
Leave a Comment