ஜெனீவா, மார்ச் 8- கடந்த ஆண்டில் மட்டும் சட்ட விரோத பயணம் மேற் கொண்ட 8 ஆயிரத்து 500 அகதிகள் உயிரிழந்ததாக அய்.நா. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ஏராளமானோர் அய்ரோப் பிய நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுகின்றனர்.
அதனுடன் சமீபத்திய உக் ரைன்- ரஷ்யா போர். இஸ்ரேல்-காசா போர் போன்றவையும் சேர்ந்தன. இதன் காரணமாக பாதுகாப்பான இடங்களை தேடி லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு குடி யேறி வருகின்றனர்.
அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிகின்றன.
அய்.நா.வின் புலம்பெயர்ந் தோருக்கான பன்னாட்டு அமைப்பு 2014ஆம் ஆண்டு முதல் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதில் கடந்த ஆண்டு மட்டும் சட்டவிரோத பயணம் மேற்கொண்ட8 ஆயி ரத்து 565 அகதிகள் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பதிவுகள் தொடங்கிய 2014ஆம் ஆண்டில் இருந்து மிக மோசமான ஆண்டாக கருதப்படுகிறது. மேலும் 2022ஆம் ஆண்டுடன் ஒப் பிடும்போது இந்த எண் ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகம் ஆகும். அவற்றுள் பெரும்பாலும் கடல் வழியாக படகு மூலம் மேற்கொள்ளப் படும் பயணங்களே ஆபத்தில் முடிகின்றன.
அதாவது மொத்தமுள்ள 8,565 பேரில் 3 ஆயிரத்து 129 பேர் கடல் வழியாக படகில் சென்றபோது இறந்தது குறிப் பிடத்தக்கது. எனவே, அகதிகள் உயிரிழப்பை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அய்.நா. அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளது.