அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்
சென்னை, மார்ச் 8 தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் அய்ம்பெரும் விழா நேற்று (7.3.2024) நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககத் தின் தேவநேயப் பாவ ணர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதா ளர் ப.அருளிக்கு தங்கப் பதக்கம் மற்றும் சான்றி தழுடன் விருது தொகை ரூ.2,00,000-அய் வழங் கினார்.
இதேபோல், வீரமாமுனிவர் விருது ச.சச்சிதானந்தத்திற்கும், நற்றமிழ் பாவலர் விருது அரிமாபாமகனுக்கும், புதுக் கவிதை வகைப்பாட் டில் தேர்வு செய்யப்பட்ட கவுதமன் நீல்ராசு உள் பட 25 பேருக்கு அமைச் சர் சாமிநாதன் விருது களை வழங்கினார்.
இதையடுத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தால் உருவாக்கப்பட் டுள்ள பழந்தமிழர் இலக் கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ் ஒளி குறித்தான ‘கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பு வெளி’ எனும் நூலை வெளியிட்டார்.
தொடர்ந்து, சங்கப் புலவர்கபிலர் நினை வாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் திருக்கோவி லூரில் ரூ.13.24 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப் பட்டுள்ள நினைவுத் தூண், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் ரூ.5,03,57,000 மதிப்பீட் டில் கட்டப்பட்டுள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் பன்னோக்குக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், கூடுதல் மகளிர் விடுதி, பழைய ஆடவர் விடுதி முதல் தளம் ஆகிய கட்டடங்கள் மற்றும் ‘குறளோவியம்’ என்ற பெயரில் ஒலி -ஒளிப்பதி வுக் கூடம் ஆகியவற்றின் கல்வெட்டுக்களைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி செயலர் இல.சுப்பிரமணியன், இயக்குநர் அவ்வை அருள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. துணை வேந்தர் வி.திருவள்ளு வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.