அதிர்வெண் மாயை (Frequency illusion)
நீங்கள் ஒரு பாட்டை கேட்கிறீர்கள். அது உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அடுத்த சில நாட்களுக்கு நீங்கள் எங்கு சென்றாலும் நீங்கள் விரும்பிய அதே பாடல் உங்கள் காதுகளில் ஒலிப்பது போல் தோன்றும்!
ஒரு திரைப்படம் பார்த்திருந்தால் முன்னர் அந்த திரைப்படத்தைப் பார்த்திருப்பது போல் நான் உணர்வோம் நமக்கு பிடித்த இரு சக்கர வாகனம் ஒன்றை உறவினர் ஒருவர் வாங்குகிறார். . அதன் பின்னர் சாலையில் அதே இரு சக்கர வாகனம் அதிக நபர்களிடம் இருப்பதாக நமக்குத் தோன்றும்!
இப்படிக் கூறுவது இப்போது பொதுவான நிகழ்வாக கருதும் நீங்கள், இதுதொடர்பாக உங்களின் நெருங்கிய வட்டத்தில் கூட அதைப் பற்றி விவாதித்திருப்பீர்கள். இந்த பாதிப்பு எல்லோரின் வாழ்விலும் ஏதாவதொரு கட்டத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு முக்கியமாக தோன்றும் விடயங்களில் நீங்கள் கவனம் செலுத்தும்போது இது ஏற்படும்.
நீங்கள் ஒரு வாகனத்தை வாங்கும் எண்ணத்தில் இருக்கும் நேரத்தில் திடீரென ஒரு மாடல் அல்லது நிறத்தின் பல கார்களைப் பார்க்கத் தொடங்கலாம்.
இதுதான் நமது மூளையின் இயற்பியல் விதி அதிர்வெண் மாயை
மருத்துவ அறிவியலில் அதிர்வெண் மாயை (Frequency illusion) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு மிகவும் பொதுவானதாகும்.
இது, Baader-Meinhof நிகழ்வு என்றும் அறியப்படுகிறது. இது மூளையின் நினைவகத்துடன் தொடர்புடையது.
Baader-Meinhof நிகழ்வு என்ற பெயர் 1994 இல் ஒரு ஜெர்மன் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1970களில் இயங்கி வந்த ஜெர்மன் புரட்சிக் குழுவான ரெட் ஆர்மி ஃபெஷன் (RAF), Baader – Meinhof என்றும் அழைக்கப்பட்டது. இந்த பயங்கரவாதக் குழுவின் இரு முக்கிய தலைவர்களின் குடும்பப் பெயர்களால் அந்த குழு அழைக்கப்பட்டது. ஜெர்மன் மக்களின் கவனத்தை ஈர்த்த இந்தக் குழுவின் Baader – Meinhof பெயரிலேயே அதிர்வெண் மாயை நிகழ்வு பின்னர் அழைக்கப்பட்டது.
இந்த பெயர் சூட்டலுக்கு பின், ஜெர்மன் நிகழ்வுகளில் பங்கேற்ற பயனர்கள் அதிர்வெண் மாயை குறித்த தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் இது ஓர் புதிய நிகழ்வல்ல. நம் ஒவ்வொருவருக்கும் நமது மூளை எவ்வாறு தனித்தன்மையுடன் செயல்படுகிறது என்பதோடு இது எப்போதும் தொடர்புடைய ஒன்று என்கின்றனர் மருத்துவர்கள்.
மனித பரிணாம வளர்ச்சியில் அதிர்வெண் மாயை நிகழ்வு அதன் வேர்களைக் கொண்டுள்ளது தற்போது உங்களின் மனதில் ஏதாவது ஒரு பொருள் தெரியும். நீங்கள் அதை அடிக்கடி பார்ப்பது போல் தோன்றும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் உயிரியலில் பட்டம் பெற்ற டாக்டர் நேஹா பதக், சிறப்பு இணையதளமான WebMD இல் வெளியிடப்பட்ட கட்டுரையில் விளக்குகிறார்.
“முதலில் ஏதோ ஒன்று அடிக்கடி தோன்ற ஆரம்பித்திருக்கிறது என்று நீங்கள் நம்புவீர்கள். பின்னர் அந்த வார்த்தையோ, கருத்தோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ இப்போது இருப்பது போல் தோன்றாது என்று நீங்கள் சமாதானம் அடைவீர்கள்.
இது உறுதிப்படுத்தல் சார்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது உண்மையில் மூளையின் அதிர்வெண் அதிகரிக்கவில்லை. ஆனால், உங்கள் மூளை அதை உங்களுக்கு உணர்த்துகிறது” என்று அவர் மேலும் கூறுகிறார்.
மூளை இதை செயல்படுத்துவது எப்படி?
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியரான அர்னால்ட் ஸ்விக்கி, 2005 இல் “அதிர்வெண் மாயை” என்ற வார்த்தையை முதலில் உருவாக்கினார்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியரான அர்னால்ட் ஸ்விக்கி, 2005 இல் “அதிர்வெண் மாயை” என்ற வார்த்தையை முதலில் உருவாக்கினார். அவரது கூற்றுப்படி, இந்த நிகழ்வு இரண்டு நன்கு அறியப்பட்ட உளவியல் செயல்முறைகளின் விளைவாகும்.
ஒருபுறம், தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாட்டில் நாம் கவனம் செலுத்துகிறோம். இதனால் அந்த நேரத்தில் நமக்கு முக்கியமானதாக தோன்றும் விடயத்தில் ஒருவரின் கவனம் குவிகிறது மற்றும் மற்ற விடயங்களின் மீதான கவனம் நிராகரிக்கப்படுகிறது.
மறுபுறம் உறுதிப்படுத்தல் சார்பு செயல்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் நினைப்பதை ஆதரிக்கும் விடயங்களைத் தேடுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கணத்தில் அதிக நீல நிற கார்களைப் பார்ப்பதன் மூலம், இவை மிகவும் பொதுவானவை என்று நாம் நம்புகிறோம். இந்த நிறத்தில் அதிக கார்கள் உள்ளன என்ற ஒருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தல் சார்பு மேலும் உறுதிபடுத்தப்படுகிறது.
இந்த வழியில், அதிர்வெண் மாயை நம் ஒவ்வொருவருக்கும் நமது மூளை தனிப்பட்ட முறையில் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்குப் பிடித்த புதிய பாடல் எப்பொழுதும் உள்ளது, ஆனால் அது உங்கள் மனதில் இருப்பதால், நீங்கள் அதை எல்லா இடங்களிலும் கவனிக்கத் தொடங்கலாம், அதையொட்டி, அது எப்படியோ மிகவும் பிரபலமாகிவிட்டது என்று நினைக்கலாம்.
அதிர்வெண் மாயை அனுபவம் அனைவருக்கும் ஏற்படாது அல்லது இதுகுறித்த புரிதல் நமக்கு பொதுவாக இல்லாததால், ஒருவேளை இந்த அனுபவம் ஒருவருக்கு நடந்தது என்பதை அவர் நினைவில் கொள்ளாமலும் போகலாம். ஆனால் இந்த நிகழ்வின் பரிணாமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது” என்று விளக்குகிறார் மருத்துவ உளவியலாளரான ஜோனா ரியாரா.
இது மனிதர்களின் உயிர் வாழ்தலோடு தொடர்புடைய பரிணாம காரணிகளைக் கொண்டிருப்பதால், மனிதர்களில் பெரும்பாலோருக்கு இந்த அனுபவம் நிகழ்கிறது என்கிறார் உளவியில் மற்றும் மனம் தொடர்பான சிறப்பு வலைத்தளத்தின் பயிற்சி இயக்குநர்.
மனிதர்களுக்கு உணர்தல் திறன் உள்ளது. அதாவது அகம் மற்றும் புறத்தில் நிகழும் எல்லா தூண்டுதல்களும் மனித மூளையால் கவனிக்கப்படுவதில்லை. அத்தகைய சூழலில் தான் நம் புலன்கள் மூலம் அவை உணரப்பட்டு செயல்களாக்கப்படுகின்றன. அந்த செயல்முறைதான் உணர்தல் எனப்படுகிறது.
“குறிப்பிட்ட ஒரு தூண்டுதல் ஒருவரை வலுவாக ஆட்கொண்டால், ஒன்று சமீபத்தில் அது வெளிப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு தீவிர நிறத்தால் அல்லது உணர்ச்சி ரீதியாக அவரை செயல்படுத்தும் ஏதோவொன்றால் தூண்டப்பட்டிருக்கலாம் அல்லது சமீபத்தில் ஏதாவது ஒன்றை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கலாம்” என்று இதன் பரிணாம செயல்முறைகளை நிபுணர்கள் விளக்குகின்றனர்.
அதிர்வெண் மாயை நிகழ்வு சைக்கோமார்கெட்டிங்கிற்குள் தூண்டுதல் நுட்பம் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
“அதிர்வெண் மாயையானது விண்வெளியுடன் இணைக்கப்பட்ட உணர்வின் செயலாக்கம் போன்ற பல்வேறு மூளைப் பகுதிகளை இணைக்கிறது. இது ஒருவர் தம்மை சுற்றியுள்ள உலகை புரிந்து கொள்ள பயன்படும் முக்கிய கூறாக விளங்கும் மூளையின் Parietal Lobe பகுதியில் உள்ளது. ஆனால் மனிதர்களின் உணர்ச்சிகள் மற்றும் நினைவுகளுடன் தொடர்புடைய லிம்பிக் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கூறுகளும் அதிர்வெண் மாயையில் பங்கு வகிக்க முடியும்,” என்கிறார் ஸ்பானிஷ் உளவியல் நிபுணர்.
அதாவது, “அடிப்படையில் இது மூளையின் ஹிப்போகாம்பல் கட்டமைப்புகளாகும் மற்றும் மூளையின் நினைவகத்துடன் தொடர்புடையது. மனிதர்களுக்கு தன்னிச்சையாக எழும் பயம் இதற்கு ஒரு உதாரணம்” என்கிறார் அவர்.
இந்த வழியில் குறிப்பிட்ட தூண்டுதலுக்கு அதிக கவனத்தைச் செலுத்துவதன் மூலம் உணர்ச்சிக் கூறுகளை அந்த அதிர்வெண்ணின் மாயையுடன் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இணைக்க முடியும். இது ஏன் ஒரு தூண்டுதல் மற்றும் பொருளுக்கு எல்லோரும் ஒரே மாதிரியாக செயல்படவில்லை என்பதை விளக்குகிறது.
எடுத்துக்காட்டாக ஒருவர் ஒரு கர்ப்பிணியைப் பார்க்கிறார் எனவும், அதன் பிறகு அவர் கர்ப்பிணி பெண்களை பார்ப்பதாகவும் வைத்து கொள்வோம். அது அவரது வாழ்க்கையில் அந்தத் துல்லியமான தருணத்தில் அவருக்கு மிகவும் முக்கியமான நிகழ்வாக இருக்கலாம்.
“இது உணர்ச்சி அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவாற்றலுடனும் தொடர்புடையது. ஒருவேளை நான் குழந்தையை இழந்திருக்கலாம் அல்லது கர்ப்பமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்திருக்கலாம் அல்லது கர்ப்பமாக இருந்திருக்கலாம். எனவே அந்தத் துல்லியமான தருணத்தில் அது எனக்கு முக்கியமான ஒன்று,” என்கிறார் ரீரா.
நாம் எதிர்கொள்ளும் தூண்டுதலின் வகையைப் பொறுத்து, மூளையின் வெவ்வேறு பகுதிகள் அதிர்வெண் மாயை தீர்மானிக்கின்றன. மேலும் இது நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது.
“இது உளவியலில் மிகவும் அடிப்படையான ஒன்று, அதாவது நமக்கு எதிர்படும் ஒரு பொருள் அல்லது மூலப்பொருளை நாம் முழு உணர்ச்சி அமைப்பின் மூலமாக நாம் உணரும் விதத்தில் அதிர்வெண் மாயை போன்றவை ஏற்படுகிறது” என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
அதிர்வெண் மாயை மூளையின் எதிர்மறை தாக்கமா?
“ஒருவர் கெட்டுப் போன ஒரு பழத்தை சாப்பிட்டு அதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதாக வைத்துக் கொள்வோம். அதன் பின்னர், அது அடிக்கடி நிகழும் ஒன்றா என்பதை அறியவும் அல்லது இந்த உடல்நல கோளாறை அனுபவித்தவர்களுடன் பேசுவதற்கு குறைந்தபட்சம் சில நாட்களை அவர் செலவிடுகிறார். இது ஆபத்தான சூழலுக்கு ஏற்றவாறு ஒருவரை மாற்றியமைக்கும் மூளையின் செயல்பாடாகும்” என்கிறார் ரீரா.
எனவே, “உறுதிப்படுத்துதல் சார்பு எப்போதும் மோசமானதாக இருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழும்படியாகவும் சார்புகள் உள்ளன” என்று மேலும் கூறுகிறார் அவர்.
இதில் சாதாரண விடயம் என்னவென்றால், இது ஒரு போக்குவரத்து விபத்தை அனுபவித்தது போன்ற அதிர்ச்சிகரமான கூறுகளுடன் இணைக்கப்படாவிட்டால் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தாது.
ஆனால் இந்த விடயத்தில் நிபுணர்களின் கூற்றுப்படி, அதிர்வெண் மாயை, மனஉளைச்சலுக்கு பிந்தைய நிலையுடன் தொடர்புடைய மற்றொரு அறிகுறியாக உருவாக்கப்படலாம், ஆனால், அது எவ்வித உடல்நலப் பிரச்னையையும், சிரமத்தையும் ஏற்படுத்தாது.
– பிபிசி தமிழ் இணையம்