திருச்சி, மார்ச் 7- பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனை இணைந்து நடத்திய மார்ப கம் மற்றும் கருப்பைவாய் புற்று நோய் கண்டறியும் இலவச மருத் துவ முகாம் மற்றும் பொது மருத் துவ முகாம் 3.3.2024, ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி யளவில் தத்தனூர் செம்பழனி கிரா மத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரி ரின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை துவக்கி வைத்து சிறப்பித்த இம்மருத்துவமுகாமிற்கு திராவிடர் கழக திருச்சி மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், கிராமத் தலைவர் டி.பாலு மற்றும் தத்தனூர் செம்பழனி எம். பிரித்திரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்று நோய் மருத்துவமனைரின் பெண் கள் பரிசோதனை மய்ய மருத்துவர் சுகிர்தா, மரு. ராஜாத்தி, ஆகியோர் தலைமையில், மருத்துவக்குழுவினர் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையையும், திருச்சி காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் ஆ. கனகராஜ் மற்றும் மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பொது மருத்துவ முகாமும் நடைபெற்றது. இப்பொது மருத்துவ முகாமில் கிராம மக்களுக்கு மருந்து, மாத்தி ரைகளை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இலவசமாக வழங்கினர்.
இம்மருத்துவ முகாமில் 105 பேர் பொதுமருத்துவ முகாமிலும் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையில் 42 பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். பெரியார் மருந்தி யல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரி யர் ஏ. ஜெசிமா பேகம், பேராசிரியர் எஸ். பிரியதர்ஷினி மற்றும் ஹர்ஷ மித்ரா புற்றுநோய் மருத்துவமனை யின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாச்சலம் ஆகியோர் இம்மருத்துவ முகாமினை சிறப் பாக ஒருங்கிணைத்தனர்.