பிரதமர் மோடி பேச்சுக்குப் பதிலடி! போதைப்பொருள் கடத்தியதாக 2 மாதங்களில் 470 பேர் கைது தமிழ்நாடு அரசு விளக்கம்

2 Min Read

சென்னை,மார்ச் 7- சென்னை நந்தனத்தில் 4.3.2024 அன்று நடை பெற்ற பா.ஜனதா பொதுக் கூட் டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி புழக்கத்தில் உள்ளது என்று பரபரப்பு குற்றச் சாட்டை கூறினார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவ டிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக் கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மது விலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போதை இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்கு தமிழ் நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற் றும் காவல் துறையினர் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் போதைப் பொருள், மனமயக்க பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மொத்தம் 1,914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தம் பெட்ட மைன், 700 டேபண்ட்டால் 100 எம்.ஜி. மாத்திரைகள், 321 நைட் ரேசன் மாத்திரைகள், 2 ஆயிரத்து 20 டைடால் மாத்திரைகள் என ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், 21 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, 6 கார்கள் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு நீதிமன்றங்களால் தண் டிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போதைப்பொருள் வழக்குகளில் சம் பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட வர்களின் 6 வங்கிக் கணக்குகள் முடக் கப்பட்டுள்ளன. சட்ட அமலாக்கம் தவிர, மாணவர்கள் இடையே போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்பு ணர்வை ஏற்படுத்த 73 விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரி களில் நடத்தப்பட்டுள்ளன.

போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்க பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தக வல்களை கட்டணமில்லா உதவி எண்-10581, 94984 10581 என்ற ‘வாட்ஸ் அப்’ எண் அல்லது [email protected]என்ற மின் னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *