குன்றத்தூர் பேரூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலை – தி.அலமேலு இணையர்களின் 21ஆம் ஆண்டு வாழ்க்கை இணை யேற்பு நாள் (7.3.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை 500 வழங்கினர். இணையர்களுக்கு இணையேற்பு நாள் நல்வாழ்த்துகள்.
——
காரைக்குடி பெரியார் பெருந்தொண் டர்கள் என்.ஆர்.சாமி – பேராண்டாள் ஆகியோரின் மூத்த மருமகளும், மேனாள் சிவகங்கை மண்டல கழக செயலாளர் சாமி சமதர்மம் அவர்களின் வாழ்விணை யருமான பவானி சமதர்மம் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.3.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடையாக வழங்கப்பட்டது.