மார்க்கம் உண்டு – ஆனால் மனம் இல்லை!

viduthalai
1 Min Read

தஞ்சாவூர், மார்ச் 6 – தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமர், பேருக்கு அவ்வப்போது ஓரிரு திருக்குறளைப் பேசுகிறார். இதை வைத்து தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே பேசிவிட்டார் என விளம்பரம் செய்கின் றனர்.
தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. ஆனால், தமிழுக்கு ஒதுக்கீடு செய் யப்படும் தொகையை விட, யாருக்கும் தெரி யாத சமஸ்கிருத மொழிக்கு 22 மடங்கு கூடு தலாக நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு உள் ளது.

தமிழ்நாட்டிடமிருந்து ஜிஎஸ்டி உள் பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் ஒன்றிய அரசுக்கு, அதை திரும் பக் கொடுப்பதற்கு மனம் இல்லை. நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், கேடு கெட்ட ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத் தனை முறை வந்த போதிலும், புயல் மழை யால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், செய்ததாகக் கணக்கு காட்டுவ தற்காக ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிச் சென்றார்.
இத்தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக் கானது மட்டுமல்ல; நம்முடைய எதிர்காலம், இந்த நாட்டின் அமைதியைப் பொருத்து இருப்பதால், அதைக் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்பதை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

ஒன்றிய பி.ஜே.பி. அரசு பற்றி கனிமொழி எம்.பி. (தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *