புதுடில்லி, அக்.1- உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களின் பட்டியலை டைம்ஸ் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவில் இருந்து மொத்தம் 91 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட ‘டைம்ஸ் உயர் கல்வி’ (Times Higher Education) அமைப்பு, கற்பித்தல், ஆராய்ச்சி தரம், தொழில் துறை ஆகியவற்றை உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டி யலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தி யாவில் இருந்து மட்டும் மொத்தம் 91 பல்கலைக் கழகங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
கடந்தாண்டு வெறும் 75 பல்கலைக்கழகங் கள் மட்டுமே பட்டியலில் இருந்த நிலையில், இந்தமுறை அது 91 ஆக அதிகரித்துள்ளது. இந்த 91 பல்கலைக்கழகங்களில், 51 பல்கலைக் கழகங்கள் தென்மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதும், அதிலும் குறிப்பாக, 22 பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என் பதும் தெரியவந்துள்ளது.
501-600 வரையிலான தரவரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கேரளத்தின் கோட்டயத்திலுள்ள மகாத்மா காந்தி பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
601 முதல் 800 வரையிலான தரவரிசையில் இருக்கும் பெரும்பாலான இந்தியப் பல்கலைக் கழகங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும். அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல் கலைக் கழகம், சவிதா மருத்துவ மற்றும் தொழில் நுட்ப அறிவியல் நிறுவனம், மற்றும் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அதே போல 800 முதல் 1000 வரையிலான தரவரிசை யில் தென்மாநிலங்களில் இருந்து 6 பல்கலைக் கழகங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கலசலிங்கம் அகாடமி ஆப் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை உள்ளன. அடுத்தடுத்த தரவரிசைகளிலும் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களே அதிக எண் ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் (IISc) முதல் இடம் பிடித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு முதலே இந்த முதலி டத்தை இந்திய அறிவியல் கழகம் தக்கவைத்து வருகிறது. பன்னாட்டு தரவரிசையிலும் ‘டாப் 250’-க்குள் நுழைந்துள்ளது. பட்டியலில், பிரிட் டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் முதலிடமும், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் இரண்டாமிடமும், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மூன்றாமிடமும், ஹார் வர்ட் பல்கலைக்கழகம் நான்காமிடமும் பெற் றுள்ளன.
இந்த மூன்றும் அமெரிக்காவைச் சேர்ந் தவை. 5 ஆவது இடத்தில் பிரிட்டனின் கேம்
பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளது. டாப் 25 இடங்களில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 16 பல்கலைக் கழகங்கள் உள்ளன. அடுத்து பிரிட்டனில் இருந்து 4 பல்கலைக் கழகங்கள், சீனாவில் இருந்து 2 பல்கலைக் கழகங்கள், சுவிட்சர்லாந்து, கனடா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து தலா ஒரு பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன.