5.3.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ முழுமையடையாத திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கத்ரா முதல் பனிஹால் வரையிலான ரயில் பாதை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு கூட இன்னமும் தொடங்கப்பட வில்லை என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் வானி கண்டனம்.
♦ தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை அளிக்க ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கோரி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உச்ச நீதிமன்றத்தில் மனு-மக்களவைத் தேர்தலுக்கு முன் தனது “நன்கொடை வணிகம்” மற்றும் “உண்மையான முகத்தை” மறைக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி இந்து:
♦ மோடியின் குடும்பம் (மோடி கா பரிவார்) என பாஜக சமூக ஊடகங்களில் ஹேஷ் டேக் செய்வதற்கு பதிலடியாக, காங்கிரஸின் சமூக ஊடக கையாளுதல்கள் ‘மோடி கா அஸ்லி பரிவார்’ (மோடியின் உண்மையான குடும்பம்) அதானி உடனான அவரது உறவை சுட்டிக்காட்டி ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளது.
♦ பதவி உயர்வு தாமதம், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மோடி அரசுடன் ஒத்துழைக்க மாட்டோம் என ஒன்றிய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திட முடிவு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ‘மோடி கி கியாரண்டி’ போர்டுகளை வைக்க வேண்டும் என எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களை மோடி அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால் கோடிக்கணக்கான செலவு ஏற்படும் என பெட்ரோல் நிறுவனங்கள் கவலை.
எகனாமிக் டைம்ஸ்:
♦ “நீதிமன்ற வளாகத்தில் மத நிகழ்வுகளை நடத்துவதை தவிர்க்கவும்” – உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஓகா அறிவுரை. விளக்கு ஏற்றும் விழாவிற்குப் பதிலாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி நிகழ்ச்சியைத் துவக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பூஷண் கவாய் கருத்து.
– குடந்தை கருணா