தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி வேலைவாய்ப்பில் அதிக நம்பிக்கை தரும் அமைச்சர் தியாகராஜன் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச். 5- தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருப் பதால் அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாக மாணவர்கள், இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட் டவற்றில் அதிகநம்பிக்கை ஏற்பட் டுள்ளது என்று தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் பெருமிதம் தெரிவித்தார்.
அசோசியேஷன் ஆஃப் சார்ட் டர்ட் அக்கவுண்டன்ட்ஸ், சென்னை அமைப்பு சார்பில் `சி.ஏ.மகாவீர் முனோத்’ நினைவு சொற்பொழிவும், தமிழ்நாட்டில் சார்ட்டர்ட் அக்க வுண்டன்ட் படிக்கும் மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியும் சென்னை மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோ சியேஷன் கூட்ட அரங்கில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண் டன்ட்ஸ், சென்னை தலைவர் ராகேஷ் சிங்வி வரவேற்புரையாற் றினார். சி.ஏ.மகாவீர் முனோத் நினைவு அறக்கட்டளை கமிட்டி தலைவர் பி.ராஜேந்திரகுமார் தலைமை உரையாற்றும் போது,

“சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படிக்கும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் அவர்க ளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறோம். அதன் அடிப் படையில் இந்தாண்டு தமிழ்நாட் டைச் சேர்ந்த 41 பேருக்கு ரூ.5லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது” என்றார்.

பின்னர் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பேசிய தாவது: `சிஏ. மகாவீர் முனோத்’ நினைவாக சார்ட்டர்ட் அக்கவுண் டன்ட் படிக்கும் மாணவ, மாண வியருக்கு உதவித் தொகை வழங் குவது புனிதப்பணியாகும். நாட் டில் 1980-களில் பர்சனல் கம்ப் யூட்டர் வந்தபோதே கம்ப்யூட்டர் புரட்சி ஏற்படத் தொடங்கி விட்டது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுனப் புரட்சி நிகழ்ந்தது. செயற்கை நுண்ணறிவு வரை பெரும்புரட்சியை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாட்டில் முதன்முதலில் சென்னை தரமணி யில் `டைடல் பார்க்’ என்ற தகவல் தொழில்நுட்பப் பூங்காவை மேனாள் முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது. மென் பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றத்தை அடைந் துள்ளது.
பிற நகரங்களைவிட தமிழ்நாட் டில் தொழில் செய்வதற்கான இடம்,தொழில்நுட்பம், சிறந்த பணியாளர்கள் கிடைப்பதாலும், அதிவேக இணைய இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல் போன்றவற் றாலும் முதலீட்டாளர்கள், பெரு நிறுவனங்கள் அதிக அளவில் ஈர்க் கப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பத் துறை யின் வியக்கத்தக்க வளர்ச்சியால் மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிறைவில், அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண் டன்ட்ஸ், சென்னை அமைப்பின் செயலர் விக்ரம் சிங்வி நன்றி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *