சண்டிகர், மார்ச் 3- விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தலைமையில் கடந்த மாதம் மோடி அரசுக்கு எதிராக டில்லியை நோக்கி பேரணியாய்ப் புறப்பட்டனர். கடந்த 2021இல் ஏற்பட்ட நிலைமை போன்று ஆகிவிடக்கூடாது என்ப தற்காக ஹரியானா – டில்லி எல்லை யிலேயே தடுத்து நிறுத்திய மோடி அரசு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல்துறை, அரியானா பாஜக அரசின் காவல்துறை மற்றும் ஒரு சில இடங்களில் துணை ராணுவப்படைகளை களமிறக்கி கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தி விவசாயிகளை அடித்துத் துரத்தியது.
3 விவசாயிகள் பலி
பிப்ரவரி மாதம் 19 மற்றும் 20 தேதிகளில் கண்ணீர் புகைக்குண்டு தாக்கு தலால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக 2 விவசாயிகள் அடுத் தடுத்து உயிரிழந்த நிலையில், பிப்ரவரி 21 அன்று பஞ்சாப்பைச் சேர்ந்த சுப்கரன் சிங் என்ற 21 வயது இளம் விவசாயி அரியானா பாஜக அரசின் ரப்பர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார். சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி நிவாரணம் அளித்து, அவரது குடும்ப த்திற்கு அரசு வேலை வழங்குவதாக அறி வித்தது. மேலும் 9 நாட்கள் கழித்து சுப்கரன் சிங் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் அரசு கொலை பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
தலையில் உலோகத்துண்டு
தொடக்கத்தில் கழுத்தில் ரப்பர் குண்டு தாக்கியதால் சுப்கரன் சிங் உயிரிழந்த தாக தகவல் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது உடற்கூராய்வில் முடிவுகள் வெள்ளியன்று வெளியானது. பரிசோத னை அறிக்கையில் சுப்கரன் சிங்கின் தலைக்குள் உலோகத்திலான துண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. விவசாயி கள் போராட்டத்தை கட்டுப்படுத்து வதற்காக கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இந் நிலையில், சுப்கரனின் தலைக்குள் உலோகத் துண்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி – அரியானா – பஞ்சாப் எல்லையில் பதற்றம்
சுப்கரன் சிங்கின் உடற்கூராய்வு முடி வையடுத்து அரியானா அரசுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே பாஜக ஆளும் அரியானா காவல்துறையினர் ரப்பர் குண்டு களுடன் உலோகத்தை பயன்படுத்தி இருக்கலாம் என தகவல் ஒன்று வெளியாகியது. இதனால் டில்லி – _ அரியானா _ – பஞ்சாப் எல்லையில் விவசாயி கள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ள தாகவும், இனி தடுப்பு மற்றும் தாக்குதல்களை எதிர் கொண்டு தில்லிக்குள் நுழைய திட்டமிட்டுள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலோகம் கலந்த ரப்பர் குண்டு மூலம் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதா அரியானா பா.ஜ.க. அரசு?
Leave a Comment