புதுடில்லி, மார்ச் 3 தேர்தல் சீர்திருத்த அமைப்பான “ஜனநாயக சீர்திருத்த சங்கம்” (ஏடிஆர்), “நேஷனல் எலெக் சன் வாட்ச்” ஆகிய இரு அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில், நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களான 225 பேரின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,” ஒவ்வொரு உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.87.12 கோடியா கும். பணக்கார மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலில் பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். பாஜகவின் 90 பேரில் 9 பேர், காங்கிர சின் 28 பேரில் 4 பேர், ஒய்எஸ்ஆர் காங்கி ரசின் 11 பேரில் 5 பேர், ஆம் ஆத்மியின் 10இல் 2 பேர், பிஆர்எஸின் 4 பேரில் 3 பேர், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 6 பேரில் 2 பேர் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
மாநிலங்களவை : 225 உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி
Leave a Comment