கந்தர்வகோட்டை, மார்ச் 2- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அக்கச்சிப்பட்டியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு மாவட்ட கல்வி அலுவ லர் (தொடக்கக் கல்வி) செந்தில் தலைமை வகித்து பேசியதாவது:- மாணவர் கள் அறிவியலில் ஏன்? எதற்கு? எப்படி என்ற வினாக்கள் மூலம் மாண வர்கள் அறிவியல் மனப் பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வும், அறிவியல் அறிஞர் கள் போல் நாமும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், இந்திய விஞ்ஞானிகளாக சர் சி.வி. ராமன், அப்துல் கலாம் போன்றவர்கள் இந்தியா விற்கு பெருமை சேர்த்த னர். என்றும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை வாசிக்க வேண்டும் என வும் பேசினார்.
ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (தொடக்கக் கல்வி) கோவிந்தன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், பிளாஸ்டிக் ஏற்படும் தீமைகள் குறித்து பேசி னார். தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக் கோட்டை மாவட்ட தலைவர் முத்துக் குமார் “சமூக மாற்றத்திற்கான அறிவியல்” என்ற தலைப்பில் பேசினார்.
இந்நிகழ்வில் வட்டா ரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி முன் னிலை வகித்தனர். இந் நிகழ்வில் மருத்துவர் சுவாமிநாதன் தேசிய அறிவியல் நாள் விழாவை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் வட்டார வள மய்ய மேற்பார்வை யாளர் பிரகாஷ், இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப் பாளர் கலையரசன் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் துரையரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர்கள் சுற்றுச் சூழல், இயற்கை வளம் உள்ளிட்டோர் தலைப்பு களில் ஆய்வு கட்டுரை களை சமர்ப்பித்தனர். அறிவியல் இயக்க கலை நிகழ்ச்சிகளாக நாடகம், பேச்சு, கவிதை உள்ளிட் டதை மாணவர்கள் செய்து காண்பித்தனர். தேசிய அறிவியல் நாள் சர். சி.வி.ராமனின் ராமன் விளைவை கண்டுபிடித்த தற்காக கொண்டாடப் படும் விளைவு என்பதால் விஞ்ஞானி ராமனுடைய முகக் கவசம் அணிந்து உற்சாகமாக அணிந்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, வார்டு உறுப்பினர் கலா ராணி, ஆசிரியர்கள் மணி மேகலை, நிவின், தற்கா லிக ஆசிரியர் தனலட்சுமி, கவுரி உள்ளிட்டோர் நிகழ்விற்கான ஏற்பாடு களை சிறப்பாக செய்தி ருந்தனர். நிறைவாக ஆசி ரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.