இந்தியா கூட்டணிக்கே வழிகாட்டும் தலைவருக்கு வாழ்த்துகள்!

2 Min Read

முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!

‘திராவிட மாடல்’ ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தி வரலாறு படைத்த மூன்றாம் ஆண்டிலேயே, இந்திய அரசின் திருப்புமுனைக்கு மூலவராக உள்ள நமது முதலமைச்சரின் பிறந்தநாள் பெருவிழா திராவிடத் திருவிழா இன்று (1-3-2024)!
இதற்கான பிறந்த நாள் செய்தி விடுத்த நமது மக்கள் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியா கூட்டணி வெற்றியை வரும் தேர்தலில் தமக்குப் பிறந்தநாள் பரிசாகத் தரவேண்டுமென வேண்டுகோளை நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளார்!

எங்கள் ஒப்பற்ற முதல்வரே!
தாங்கள் விரும்பிய பரிசை நிச்சயம் தருவார்கள் – தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல; இந்தியத் திருநாட்டு மக்கள் அனைவருமே. காரணம், வெறுப்புப் பிரச்சாரம், பொய்ப் பிரச்சாரம் செய்யும் பா.ஜ.க. மோடி போல அல்லாது அனைவருக்கும் அனைத்தும் நீங்கள் தருகிறீர்கள்!
தங்கள் பார்வை பேதமில்லாப் பெருவாழ்வை மக்களுக்கு அளிக்க வகை செய்யும் விசாலப் பார்வை!
அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நீங்கள் வழிகாட்டி! மருத்துவக் கல்வி உரிமையை வாங்கித் தந்தவர் என்பது இப்போது அங்கும் எங்கும் புரிந்து வருகிறது.
இந்தியா கூட்டணியே தங்களது வழிகாட்டல்தானே! ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது” என்பதற்கே முன்னுரிமை தரும் இலக்குடன் இயங்குவதே இப்போதைய தேவை என்ற சரித்திரக் கடமையை அனைத்துத் தலைவர் களுக்கும் நினைவூட்டி, துவக்கப் பணிகளை செய்ய வைக்கும் தொலைநோக்காளர் நீங்கள்.
எங்களது பரிசு காத்திருக்கிறது, மக்களின் அமோக ஆதரவினால் தமிழ்நாடு, புதுச்சேரி 40-யும் தாண்டி, ஒன்றியத்தில் புதியதோர் ஆட்சிப் பொலிவுடன் துவங்கி, வரும் ஜூன் 3 இல் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் 101 ஆவது விழாவாக டில்லி தலைநகரில் நடைபெறும். நமது இலட்சியம் நிச்சயம் ஆகும்!
இது ஆருடமோ, ஆசையோ அல்ல; மோடி மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தினால் ஏற்படும் விளைச்சல்! அதற்கு அவரது நிலை தடுமாறும் பேச்சே போதிய உரமிட்டு ஆயத்தம் செய்து வருகிறது!
எமது முதலமைச்சருக்குப் பரிசு காத்திருக்கிறது!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
1-3-2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *