புதுடில்லி,பிப்.29- உத்தரப் பிரதே சத்தில் உள்ள அலிகார் பல்கலைக் கழகத்தில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடியபோது மாணவி ஒருவர் ஹிஜாப் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம்’ என்கிற பெயரில் நடைப்பயணம் மேற் கொண்டு வருகிறார். பயணத்தின் போது உத்தரபிரதேச மாநி லத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் ராகுல் காந்தி மாண வர்களுடன் உரையாடினார். அப் போது ராகுல் காந்தியிடம் மாணவி ஒருவர் ஹிஜாப் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-
“ஒரு பெண் எந்த உடையை அணிய விரும்புகிறார் என்பது அவ ருடைய விருப்பம். அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து. நீங்கள் என்ன அணிகிறீர்கள் என்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு. எனவே, என்ன அணிய வேண்டும் என்பது உங் களின் முடிவு. மாறாக, நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதை வேறு யாரும் தீர்மானிக்க வேண்டும் என்ப தாக நான் நினைக்கவில்லை” என்றார்.
“ஒருவர் என்ன அணிய வேண்டுமென்பது அவருடைய விருப்பம்” மாணவியின் கேள்விக்கு ராகுல் பதில்
Leave a comment