கந்தர்வகோட்டை பிப்.28 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற துளிர் திறனறிவுத் தேர்வை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்க டேஸ்வரி தொடங்கி வைத்தார். தமிழ் நாடு அறிவியல் இயக்க
வட்டாரத் தலைவர் துரையரசன், வட்டாரத் துணைத் தலைவர் சின்ன ராஜா வாழ்த்துரை வழங்கினார்கள்.
அரசு உயர்நிலைப்பள்ளி வெள் ளாள விடுதியில் நடைபெற்ற தேர்வை தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக் கோட்டை மாவட்டத் தலைவரும் பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்துக் குமார் தொடங்கி வைத்தார்.
முள்ளிக்காப்பட்டி நடுநிலைப் பள் ளியில் நடைபெற்ற தேர்வை துளிர் திறனறிவுத் தேர்வை கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தங்கராசு தொடங்கிவைத்தார்.
துளிர் திறனறிவுத் தேர்வு குறித்து புதுக்கோட்டை மாவட்ட துளிர் திற னறிவு இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வ கோட்டை ஒன்றிய வட்டாரச் செயலா ளர் ரகமதுல்லா பேசியதாவது:
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் திறனறிவுத் தேர்வு அக்கச்சிப்பட்டி, முள்ளிக்காப்பட்டி, மட்டங்கால், வீரடிப் பட்டி, விராலிப்பட்டி, காட்டுநாவல், கெண்டையம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வெள்ளாளவிடு உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.
துளிர் திறனறிவுத் தேர்வு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
தேர்வில் கலந்து கொள்ள மாணவர் களுக்கு பாராட்டு சான்றிதழும் மாநில அளவில் முதல் 10 இடமும், மாவட்ட அளவில் முதல் 10 இடம் பெறும் மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.
மாதம் தோறும் விஞ்ஞான துளிர் மாத இதழ், மற்றும் ஜந்தர் மந்தர் இரு மாத இதழ் மாணவர்களின் விருப்பத் திற்கு ஏற்ப வழங்கப்படும்.
துளிர் திறனறிவுத் தேர்வு எதிர் காலத்தில் அய்ஏஎஸ், அய்பிஎஸ் டி.என்.பி.சி, எஸ்.எஸ்.சி. ரயில்வே, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட போட்டி தேர்வு எழுதுவதற்கு மிகுந்த பயனளிக்க கூடியதாக இருக்கும்.
துளிர் திறனறிவுத் தேர்வு வினாக் களாக அறிவியல், கணிதம், இலக்கியம், பொது அறிவு உள்ளிட்ட வினாக்களில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்று பேசினார்.
துளிர் திறனறிவுத் தேர்விற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி,சீதா, ராசாத்தி , செல்வி, அமராவதி, வேதநாயகி, சுப்புலட்சுமி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந் தனர்.
ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, சத்தியபாமா, யோவேல், ஜஸ்டின் திரவியம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.