ரோஹதக், பிப். 28- அரியானா மாநிலத்தில் உள்ள பகதூர் என்ற இடத்தில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் மேனாள் சட்ட மன்ற உறுப்பினரு மான நபே சிங் காரில் சென்று கொண்டிருந் தார். அப்போது அவரை சிலர் சுட்டுக் கொன்றுள் ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் உயிரிழந்தார். மேலும், 2 பேர் காய மடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகி றார்கள்.
இந்த துப்பாக்கிச் சூடு நிலத்தகராறு காரண மாக நடைபெற்று இருக் கலாம் எனக் கூறப் படுகிறது.
அடையாளம் தெரி யாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரசி யல் கட்சித் தலைவர் பலியாகியிருப்பது அரியானாவில் பதற் றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
லோக்தள் கட்சி 2021ஆம் ஆண்டு அரி யானா தேர்தலில வெற்றி பெற்றது., அதன் ஆதர வோடு பாஜக அங்கு ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! அரியானாவில் ஆளும் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை
Leave a Comment