பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவ 22- “ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றினால்தான், அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி என்ற இலக்கை மாநிலங்களை எட்ட முடியும். நான் தமிழ்நாட்டிற்காக மட்டும் இதைக் கூறவில்லை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநி லங்களுக்கும் சேர்த்துதான் கூறுகிறேன்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் நேற்று (21.11.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மாணவர்களுக்கு பட்டங் களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த விழாவில் பேசியதாவது:
“இசைக்கும், என் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுது வதில் மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும் வல்லவர். அதேபோலதான், தலைவர் கலைஞர் கவிதைகள் மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களை கூட எழுதி இருக்கிறார். அவர் பாட்டு பாடுவது இல்லையே தவிர, அனைத்து இசை நுணுக்கங்களும் அவருக்கு நன்றாக தெரியும். இசையை கேட்ட வுடனே, அதில் சரி எது, தவறு எது என்று சொல்லி விடுவார். அந்தளவுக்கு வல் லமை பெற்றிருந்தார்.
அடுத்து, ‘விண்ணோடும் முகிலோடும் விளை யாடும் வெண்ணிலவே’ உள்ளிட்ட பாடல்களை பாடியது என்னுடைய மாமா ‘தமிழிசைச் சித்தர்’ சிதம்பரம் ஜெயராமன். அந்த வகையில் எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியா விலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக் கழகம் என்ற பெருமை, இந்தப் பல் கலைக்கழகத்துக்குத்தான் உண்டு.
மாநில அரசின் நிதி உதவியும்
முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியும் செயல்படும் பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக் கழகம் இருக்கிறது. அதைவிட சிறப்பு என்ன வென்றால், இந்தப் பல்கலைக் கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சரே வேந்தராக இருக்கின்ற உரிமை இருக் கிறது. அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்ததைதான் பேசுகிறேன். இப் படி முதலமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால் தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும்; வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதனு டைய நோக்கமே சிதைந்து போய்விடும் என்று நினைத்துத்தான், 2013 ஆம் ஆண்டே இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர்தான் என்று அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஜெய லலிதா முடிவு செய்திருந்தார். இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம். இப்போது இருக்கக் கூடிய நிலையை நினைத்து நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்.
இசை மேதைகள்
இன்றைக்கு இசைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், பத்மபூஷன் பி.சுசீலா, பி.எம். சுந்தரம் என இரண்டு இசை மேதைகளுக்கு டாக்டோரேட் (மதிப் புறு முனைவர்) பட்டம் கொடுத்து பெருமைப் படுத்தியிருக்கிறோம். இதன் மூலமாக, டாக்டர் பட்டமும் பெருமை அடைகின்றது. பாடகி சுசீலா அவர்களுடைய குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். அவருடைய பாட்டை நான் எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது காரில் பாட்டைக் கேட்டுக்கொண்டே போவேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, அடிக்கடி நான் பல இடங்களில் அதை பாடியிருக்கிறேன். “நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்க வில்லை; உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை”. அதனால் மேடைக்கு வந்த வுடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுதான், நான் உங்கள் ரசிகன் என்று சொன்னேன். வெளிப்படையாகவே சொன்னேன்.
இந்த இரண்டு மேதைகளுக்கு டாக்டோரேட் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறோம். இதன் மூலமாக டாக்டோரேட் பட்டமும் பெருமை அடைகிறது. பாடகி சுசீலா அவர்களுடைய குரலில் மயங்காதவர்களே நிச்சயமாக இருக்கவே இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அப்படிப்பட்ட புகழைப் பெற்ற பாடகி அவர். அதேபோல், இசையில் அறிஞர் பி.எம்.சுந் தரம். பன்முகத் திறமை கொண்டவர். மிகப் பெரிய இசை மரபில் பிறந்து, இசைத் துறைக்கு அரிய தொண்டாற்றி வருபவர். மங்கல இசை மன்னர்கள், மரபு தந்த மாணிக்கங்கள் போன்ற இசைத் துறையில் முக்கியமான நூல்களை படைத்தவர். எல்லாவற் றிற்கும் மேலாக தலைவர் கலைஞரின் மனதில் இடம் பிடித்தவர். இன்னும் சொல்லப் போனால், நம்முடைய தஞ்சை மண்ணைச் சார்ந்தவர். இப்படிப்பட்ட இசைவாணர்களுக்கு இன்றைக்கு நாம் பெருமை செய்திருக்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினுடைய முதலமைச்சரான நான் இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக வும் இருப்பதால்தான் மக்கள் எண் ணத்தை பிரதிபலிக்கின்ற வகையில் இது போன்ற முடிவுகளை எடுக்க முடி கிறது. அதனால் அனைத்து பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் முதலமைச் சரே இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதற்காக சட்ட முன் வடிவுகளையும் தமிழ்நாடு சட்டமன் றத்தில் நிறைவேற்றியிருக்கிறோம். இது தொடர்பான சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்ப வில்லை. உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கு களை விசாரித்து வருகின்றது. நல்ல செய்தி வரும். வரும் என்று எதிர்பார்ப்போம். வர வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.
மாநில அரசின் உரிமைகளை
செய்திகளில் பார்த்திருப்பீர்கள், நாளிதழில் படித்திருப்பீர்கள். மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையில், நேற்றைய தினம், நீதிபதிகள் கருத்துகளை அதில் சொல்லியிருக் கிறார்கள். ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை கல்வி மானிய பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். இப்படி மாற்றினார்தான் எல்லோருக்கும் கல்வி, எல் லோருக்கும் உயர்கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்டமுடியும். நான் தமிழ் நாட்டுக்காக மட்டும் இப்படி சொல்லவில்லை. இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களை சேர்த்து தான் சொல் கிறேன். நான் அடிக்கடி சொல்வதுபோல, கல்வி தான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்கவேண் டும். அதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.
நலிந்த நிலையில் இருக்கின்ற மரபு வழிக் கலைகள், பண்டைய தமிழ்ப் பண்பாட்டை பிரதி பலிக்கின்ற கலைகள், அந்தக் கலைகளை உயிர்ப் பித்து, வருங்கால தலைமுறைகளுக்கு கொண்டு செல்கின்ற முயற்சிகளில் இந்தப் பல் கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அதற்கான முழு ஒத் துழைப்பையும் மாநில அரசு வழங்கி வருகிறது. இன் னொரு முக்கியமான சிறப்பு என்னவென்றால், மாற்றுத் திறனாளிகள் பலர், இந்தப் பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் இசை மற்றும் கவின்கலைகளை பயின்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகை யில், சமூகநீதியைக் காக்கின்ற பல்கலைக்கழகமாக இந்தப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.