இனி தங்கமங்கை தமிழ்நாட்டு ஆட்டோ ஓட்டுநர் மகள் வித்யா ராம்ராஜ் பி.டி. உஷாவின் சாதனையை சமன்செய்தார்

2 Min Read

இந்தியா, தமிழ்நாடு

பூஜிங், அக். 3 – 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  ஆட்டோ ஓட்டுநரின் மகள் வித்யா ராம்ராஜ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர், ஏற்கெனவே ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த கேரளாவைச் சேர்ந்த பிரபல வீராங்கனை பி.டி.உஷா வின் சாதனையை சமன் செய்துள்ளார்.  நடப்பாண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ வில் நடைபெற்று வருகிறது. ஆசிய  விளையாட்டுப் போட்டியின் கான்டினென்டல் மல்டிஸ் போர்ட் நிகழ் வின் 19ஆவது  போட்டிகள்,  செப்டம்பர் 23 அன்று தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

தடகளப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில்,  இந்திய வீரர்கள் தேஜஸ்வின் சங்கர், வித்யா ராம்ராஜ் ஆகியோர் சிறப்பாக விளையாடி பதக்கம் பெறுவதற்கான  நம்பிக்கையை வலுப்படுத்தினர். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்ற தமிழ் வீராங்கனை  வித்யா ராம் ராஜ் சிறப்பாக ஓடி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

வித்யா ராம்ராஜ் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். வித்யா ராம்ராஜ் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.  அத் துடன் கேரளவைச்சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் தேசிய சாதனையை  சமன் செய்துள்ளார். இந்த சாதனையையை கடந்த  39 ஆண்டுகளாக மற்ற இந்திய வீரர்களால் முறியடிக்க முடியாத நிலையில், தற்போது தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா படைத்தார். பி.டி.உஷாவின் இந்த சாதனையை தொட்டு சமன் செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில்  வசிப்பவர் வித்யா ராம்ராஜ். கரோனாவுக்கு பிறகு அவர் சென் னைக்கு மாறினார். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார்.  நித்யா, வித்யா  இருவரும் இரட்டை சகோதரிகள், இருவரும் தடகளத்தில் இந்தியாவிற்காக களமிறங்கியுள்ளனர். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வித்யா பங்கேற்கும் நிலையில், 100 மீட்டர் தடை ஓட்டத் தில் நித்யா பலம் காட்டி வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு இரட்டைச் சகோதரிகள் இணைந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *