புழல்,பிப்.26- புழல் தோழர் டி.பி.ஏழு மலை கடந்த 24.2.2024 அன்று மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.
ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை, துணைத்தலைவர் வை.கலையரசன், துணைச் செயலாளர்கள் உடுமலை வடிவேல், பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி நகர தலைவர் முருகன், துணைத் தலைவர் சி.வச்சிரவேல், பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக்கேயன், அம்பத்தூர் அ.வெ.நடராசன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், தலைமைக் கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி, பொதுக் குழு உறுப்பினர் அ.செ.செல்வம், சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூசி.இளோங்கோவன்,சென்னை உடுமலை வடிவேல், புழல் ஒன்றிய தலைவர் ஜெகத் விஜயகுமார்,செயலாளர் உதயகுமார், நகர தலைவர் இரா.சோமு, பொதுக்குழு உறுப்பினர்கள் கெஜேந்திரன், கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் சக்கரவர்த்தி, திமுக பேச்சாளர் திராவிடமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சுபாஸ்சந்திரபோஸ், ஒசூர் நகர விசிக துணைச்செயலாளர் த.மு.ராசகோபால், இளைஞரணி இரணியன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜனாதிபதி, செம்பியம் பகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன், கி.இராமலிங்கம் மற்றும் கோவை இராமகிருஷ்ணன் உள்பட பலர் இறுதி மரியாதை செலுத்தினர்.
அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர் மாலதி ஏழுலை, மகள்கள் தேன்மொழி, தாமரைசெல்வி, அருள்மொழி மற்றும் மருமகன்கள் உள்ளிட்ட குடும்பத் தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 25.2.2024அன்று மாலை புழல் சுடுகாட்டில் அவரது உடல் எந்தவித சடங்குகளுமின்றி எரியூட்டப்பட்டது.
புழல் தோழர் ஏழுமலை மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
Leave a Comment