சென்னை, பிப்.25- 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்த்தில் கலந்துகொண்டு 9 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்ற வி.நமசிவாயம் (மேனாள் நகர் மன்ற உறுப்பினர்) அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு 18.2.2024 ஞாயிறன்று நண்பகல் 4 மணிக்க சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை கீழவீதியிலுள்ள அன் னாரின் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார். மற்றும் மாவட்ட கழக செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், மாவட்ட ப.க. செயலர் செங்குட்டுவன், பேராசிரியர் த.இராசவன்னியன், மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர் அ.முருகேசன் ஆகியோர் உரையாற்றினார்.
தி.மு.க. பொறியாளர் அணி மாநில செயலாளருமான புவனகிரி மேனாள் சட்டமன்ற உறுப்பினரு மான துரை.கி.சரவணன் இறுதி யாக மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தார்.இறுதியாக, நமசி வாயம் அவர்களின் மகன் குமார் நன்றி கூறினார். மேனாள் அமைச் சர் வி.வி.சுவாமிநாதன் அனுப்பிய இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.
சிதம்பரம் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நமசிவாயம் படத்திறப்பு
Leave a comment