உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து Concern Worldwide and Welthungerhilfe என்ற ஜெர்மனியின் அமைப்பு ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடும். இதனை அடிப்படையாக வைத்து முதலீடுகள், புதிய தொழில் துவங்க பிறநாடுகள் முன்வரும் இந்த ஆண்டு வெளியான தரவரிசைபட்டியலில் 125 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா 111 ஆவது இடத் தில் உள்ளது. கடந்த 2020 இல் 94 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2021 இல் 101 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது
21 Mar 2023 பிரிண்ட்’
அய்க்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023 ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. 146 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 126 ஆவது இடமே கிடைத்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நம் நாடு பெற்ற 136 ஆவது இடத்துடன் ஒப்பிடும்போது இது 10 இடங்கள் முன்னேற்றம் என்றபோதும், பிரச்சினைகளில் தவிக்கும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (108 ஆவது இடம்), இலங்கையைவிட (112) பின்தங்கியே உள்ளது.
3 May 2023‘டெக்கான் ஹெரால்ட்’
புதுடில்லி: உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது, 180 நாடுகளில் 161 ஆவது இடத்தில் உள்ளது.
செய்தியாளர்களுக்கு எல்லை இல்லை (ரிப் போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) தனது உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டின் 21 ஆவது பதிப்பை வெளியிட்டது. பத்திரிகை சுதந்திரத்தின் அடிப் படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 161 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 150 ஆவது இடத்தில் இருந்து 11 ஆவது தரவரிசைக்கு மோசமாக சரிந்து உள்ளது. தெற்காசியாவிலும் கூட,தரவரிசைபட்டியலில் மிக மோசமான சரிவை இந்தியா கண்டுள்ளது. வங்காள தேசம் சற்று மோசமாக இருந்தாலும், 163 ஆவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் இந்தியாவை விட 150 ஆவது இடத்தில் உள்ளது. தலிபான் அரசாங்கம் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு நண்பன் இல்லை என்று அறியப்படும் ஆப்கானிஸ்தானும் கூட 152 ஆவது இடத்தில் உள்ளது. பூட்டான் 90 ஆவது இடத்திலும், இலங்கை 135 ஆவது இடத்திலும் உள்ளன. பத்திரிகையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று நம்பும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்தியா ஏன் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது குறித்து ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் கூறியதாவது:-
“பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமை யின் குவிப்பு இவை அனைத்தும் “உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில்” பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை காட்டுகிறது” என கூறியுள்ளது.