தலைமை கழக அமைப்பாளர் திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் சம்பந்தி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செ.முத்துசாமி (வயது 91) நேற்று (23.02.2024) காலை 11 மணி அளவில் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா, ஒன்றிய செயலாளர் கு.சின்னதுரை ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினனர். கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தொலை பேசி வாயிலாக தலைமைக் கழக அமைப் பாளர் சு.கிருஷ்ணமூர்த்தியிடம் இரங்கல் தெரிவித்தார்.