தமிழ்நாடு அரசு 19.02.2024 அன்று சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுற சீரமைக்கும் திட்டம் மேற் கொள்ளப்படும் என்றும், அடையாறு ஆற்றின் இரு கரைகளிலிலும் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வெளி யேறுவதற்கு ஏற்ற மாற்று வழிகளை அமைப்பது என்றும், நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது என்றும், ஆற்றின் கரையில் மக்களின் மனம் கவரும் வகையில் 4 பூங்காக்கள் அமைக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பு வரவேற்கிறது.
வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக அடையாறு ஆற்றை பாதுகாக்க வேண்டும், அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப் பதை தடுக்க வேண்டும், அடையாறு ஆற்றினை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத்துறைக்கும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும், நலமன்ற கூட்டமைப்பின் சார்பாக அடையாறு ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி கருத்தரங்கம் ஒன்றும் நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கையை ஏற்கும் விதமாக நிதிநிலை அறிக்கையில் மேற்கண்டவாறு வந்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு, முதல மைச்சருக்கு வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப் பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளி யேறும் கழிவுநீரை சுத்திகரிக்க வரதராஜபுரம் பகுதியில் ஆற்றின் இரு கரைகளிலும் தலா ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென்றும், அதேபோல் அமைக்கப்பட உள்ள பூங்காவில் ஒரு பூங்காவை வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்க வேண்டு மெனவும், வரக்கூடிய காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் வெள்ள தடுப்பு பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டு மெனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
– வெ.ராஜசேகரன் (தலைவர்)
– டி.சந்தாகிருஷ்ணன்
(பொதுச் செயலாளர்)
வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பு