மதுரை திருமங்கலம் பெரியார் பெருந்தொண்டர் சுந்தர்ராஜன் பேரனும், அன்புமணி-மகேஸ்வரி ஆகியோரின் செல்வனுமாகிய இன்பபிரபாகரன்-சுபாமகேஸ்வரி மணவிழாவை தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் 1.10.2023 அன்று மதுரையில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம், பேரவை தலைவர் கா.சிவகுருநாதன், உசிலை மாவட்ட தலைவர் த ம. எரிமலை, செயலாளர் முத்துக்கருப்பன், நா.முருகேசன், மேலூர் மாவட்டச் செயலாளர் ஜெ.பாலா, பி.வரதராஜன், மகளிரணி பாக்கியலட்சுமி, கலைச்செல்வி, விடுதலை செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.