வேந்தர் கி.வீரமணி தலைமை வகித்து பரிசளித்து பாராட்டுரை
வல்லம், பிப். 22- வல்லம், தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது ஆண்டு விழா மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 44 ஆவது ஆண்டுவிழா நேற்று (21.02.2024) பெரியார் அறிவு மய்யத்தின் முத்தமிழ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்திட, பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.
அவர் தமது உரையில் நமது சாதனைகளைக் கொண்டாடவும், நமது பயணத்தைத் திட்டமிடவும் வருங்காலத்தை சிந்திக்கவும் கூடியிருக்கிறோம். எப் பொழுதும் பகுத்தறிவுச் சிந்தனைகளாலும், அறிவுப்பூர்வ மான சிந்தனையாலும் நம்மை வழி நடத்தும் வேந்தர் அவர்களை முதலில் வரவேற்கிறேன். தங்கள் வழி காட்டுதலினால் நாங்கள் வலிமையையும், ஆற்றலையும் பெற்றிருக்கிறோம். நமது பல்கலைக்கழகம் ஒரு அற்புதமான நிறுவனமாக உருவாக்குவததில் முக்கியப் பங்காற்றிய உங்கள் அர்ப்பணிப்பை கண்டு நெகிழ் கின்றோம்.
மேலும் எங்களின் அழைப்பை ஏற்று இன்று முதன்மை விருந்தினராக வருகை தந்த சென்னை (CSIR) கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மய்யத் தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் டி.ஹேமலதா அவர் களை வரவேற்கிறேன். டாக்டர் ஹேமலதா எங்களின் பெருமைக்குரிய மேனாள் மாணவி என்பதைக் குறிப் பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் அனைத்து திட்டங்களிலும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் மேற்கொண்ட புதுமையான ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் முயற்சிகள் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான பாராட்டையும் அங்கீகாரத் தையும் பெற்றுள்ளது. நீங்கள் எங்களிடையே இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
சிறப்பு விருந்தினர் பொறியாளர் ப.சிந்தனைசெல்வி, பொதுப்பணித்துறை புதுக்கோட்டை உதவி செயற் பொறியாளர் அவர்களும் எங்கள் மேனாள் மாணவரும் ஆவார். நமது பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் அவர்களை நாங்கள் வரவேற்கின்றோம். மேலும் முதன்மையர்கள், இயக்கு நர்கள், துறைத்தலைவர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இன்று நீங்கள் எங்களோடு இருப்பதில் மிக மகிழ்ச்சியடைகின்றேன்.
நாம் எதிர்காலத்தை எதிர்நோக்கும்போது கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகத்திற்கான பணியில் சிறந்து விளங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப் படுத்துகிறோம்.
சிறப்பு விருந்தினர் முனைவர் டி.ஹேமலதா (முதன்மை விஞ்ஞானி, சி.எஸ்.அய்.ஆர், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம்) அவர்கள் தனது சிறப்புரையில், சிறப்பு வாய்ந்த இப்பல்கலைக்கழக ஆண்டு விழாவில் நான் படித்த பல்கலைக்கழகத்திலே என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் பயின்ற காலத்தில் எப்படி சுற்றுச்சூழல் இருந்ததோ அதே சுற்றுச்சூழலும் மற்ற வகையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதை என்பதை இன்று கண்டுகளித்தேன். இக்காலத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாகவும் மற்றும் அதன் நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் பயிலுவ தற்கு ஏராளமான கல்வி பாடப்பிரிவுகள் உள்ளது என்றும் அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக திரையில் காட்சியாக காண்பிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் பொறியாளர் ப.சிந்தனைசெல்வி, (பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், புதுக் கோட்டை) உரையாற்றும்போது “நான் இங்கே பயின்று இதே கல்லூரியில் சிறிது காலம் பெரியார் பொறியியற் கட்டுமான ஆலோசனை மய்யத்தில் பணியாற்றி மேலும் தமிழ்நாடு தேர்வாணையைத் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்நிலைக்கு வந்துள்ளேன். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பல வகையில் பணியினை கற்றுக்கொடுத்து என்னை மேன்மைப்படுத்தியவர்கள். இங்கு கல்வியை மட்டும் கற்றுக்கொடுக்காமல் நாம் படிப்பை முடித்து வெளியில் செல்லும் போது அதற்கான தகுதியினை இங்கே கற்றுக்கொடுக்கிறார்கள் என்று கூறினார். பல் கலைக்கழகத்தின் மேனாள் மாணவி சிந்தனைச் செல்வி பெரியார் உலகத்திற்காக முதல் தவணையாக ரூபாய் 10,000 வேந்தர் அவர்களிடம் வழங்கினார்.
பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது, பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி இரண்டுமே மகளிருக்காக தொடங்கப்பட்டு மகளிர் மட்டுமே சேர்க்கப்பட்டு பின்னர் இருபாலரும் கல்வி கற்கக்கூடிய கல்லூரியாக பெரியார் நூற்றாண்டு கல்லூரியும், பெரியார் மணியம்மை மகளிர் தொழில்நுட்ப கல்லூரியும் மாற்றம் செய்யப்பட்டது. மகளிர் கல்லூரியாக இருந்த போது அதனின் முழுப்பயனையும் எங்களது செல்வங்கள் பெற்றுள்ளனர். இவர்கள் பெற்ற ஊக்கம், தந்தை பெரியாரின் கொள்கை இவர்களை வளர்த்துவிட்டது ஆகையால் அவர்களுக்கு நாம் கவுரவிப்பது நமது கடமையாகும் என்றார்.
நமது பல்கலைக்கழகத்தில் பயின்ற எங்கள் மாணவச் செல்வங்களின் முன்னேற்றமே எங்களுக்குப் பெருமை. இங்கே படித்த மாணவர்கள் உயர்ந்த நிலையில் இருக்கும் நிலையினைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு பெற்றமைக்காக மகிழ்ச்சி அடைகின் றேன். இன்று முதன்மை விஞ்ஞானியாக அமர்ந்திருக்கும் டி.ஹேமலதா அவர்களையும், பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று தொழில் துறையில் இன்று உதவி செயற்பொறி யாளராக உள்ள பி.சிந்தனை செல்வி அவர்களையும் இந்த நிகழ்ச்சியில் அவர்களை சிறப்பு விருந்தினராக பெற்றமைக்கு நாம் மகிழ்ச்சியடைகிறேன்.
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு கூட்டுப் பணியாளர் நல மன்றம் சார்பாக ரூ.10,000 வேந்தர் அவர்களிடம் காசோலையாக வழங்கப் பட்டது. பல்கலைக்கழக டெக்மேக் இதழ் வேந்தர் அவர் களால் வெளியிடப்பட்டு அதனை சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவர் களின் நாட்டுப்புற நடனமும், போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு மவுன நாடக மும், சிலம்பாட்டம் ஆகியவைகளும் நடைபெற்றன. இறுதியாக பெரியார் நூற்றாண்டு கல்லூரி யின் முதல்வர் ஆர்.மல்லிகா நன்றியுரையாற்றினார்.