உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்க உச்சநீதிமன்ற அனுமதி தேவையில்லை

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.22 மாநில உயர்நீதி மன்றங்களில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்குவதற்கு உச்சநீதிமன்றத் தின் அனுமதி தேவையில்லை; குடிய ரசுத் தலைவர் ஒப்புதல் போது மானது என மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக் குரைஞர்கள் தெரிவித்தனர்.
டில்லியில் வழக்குரைஞர்கள் குழு நடத்திய நிகழ்வில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களில் உள்ள அலுவல் மொழிகளை அந்தந்த மாநிலங் களின் உயர்நீதி மன்றங்களில் அலு வல் மொழியாக ஆக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டவை என்ன? என்பது குறித்த கலந்துரை யாடலுக்கான தேசிய மாநாடு டில்லி யில் 17.2.2024 அன்று நடை பெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேனாள் நீதிபதிகள், மூத்த வழங்குரைஞர்கள் கலந்து கொண்டு பேசினர்.
சென்னை உள்ளிட்ட உயர் நீதி மன்றங்களில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக ஆக்குவதற்கான முன் மொழிவுகளை தமிழ்நாடு உள் ளிட்ட மாநிலங்கள், ஒன்றிய அர சுக்கு அனுப்பியுள்ளது. இதை ஒன் றிய சட்ட அமைச்சகம் உச்சநீதிமன் றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அப்போது, இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன் றத்தின் மேனாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் கலந்து கொண்டு பேசியதாவது: சென்னை உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் தமிழ் உள் ளிட்ட பிராந்திய மொழிகளை அலு வல் மொழியாக ஆக்குவதற்கு முன் மொழிவு களையும் தீர்மானங்களை யும் சட்டப்பேரவைகளில் நிறை வேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பும் போது, 1965-ஆம் ஆண்டு அமைச்சர வைத் தீர்மானத்தைச் சுட்டிக் காட்டி, ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப் புகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348(2)-இன்படி உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப் பத் தேவையில்லை. உச்சநீதிமன் றத் தின் முழு அமர்வு அல்லது தலைமை நீதிபதி உத்தரவு இதைக் கட்டுப்படுத்தாது.

மாநில அரசு தீர்மானத்தை நிறை வேற்றி அனுப்பும்போது அதை குடியரசுத் தலைவர் பரிசீ லனைக்கு ஆளுநர் அனுப்பலாம். குடியரசுத் தலைவர்தான் உயர் நீதிமன்ற அலு வல் மொழி குறித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவ தற்கு முன்பு உச்சநீதிமன்றத் தின் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கூறி அனுப்புகிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 348(2)-இல் அப்படி குறிப்பிடப்படவில்லை. உச்சநீதிமன் றத்திற்கு அதிகாரமில்லை. ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டப் பிரிவு 342-இன்படி பிரிவு 348(2) என்ன கூறப்பட்டுள்ளது என்கிற விளக் கத்தை உச்சநீதிமன்றத்தில் கோர லாம். அதைக் குடியரசுத் தலைவ ருக்கு ஒன்றிய அரசு தகவல் கொடுக்க வேண்டும். இதைத்தான் ஒன்றிய அரசு செய்யவேண்டும் என்றார் அவர்.

இதே கருத்தை உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர்.பாலசுப் பிரமணி யம், தமிழ்நாடு, – புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவர் கே.பாலு ஆகி யோரும் வலியுறுத் தினர். தமிழ்நாடு வழக்குரைஞர் பால் கனக ராஜ் “இந்த கருத்துக்கு பொதுமக்கள் ஆதரவு திரட்ட வேண்டும்” என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா பேசு கையில், “தமிழ் பன்னாட்டு மொழி யாக இருப்ப தோடு, நவீன அறிவியல் மொழியாகவும் மாறி வருகிறது. தேசிய மொழி, பிராந்திய மொழி என பாகுபாடு பார்க்கக் கூடாது. முன்பு தமிழ்நாடு அரசு மெட்ராஸை “சென்னை’ என மாற்றக் கோரிய போது மறைந்த தலைவர் (உள்துறை அமைச்சராக) இந்திரஜித் குப்தா உடனடியாகச் செயல்பட்டார். “தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்வதில் என்ன தவறு?’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *