காட்டுமன்னார் கோவில்,அக் 5 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள ம.ஆதனூர் கிராமத்தில் சுவாமி நந்தனார் குருபூஜை விழா நடை பெற்றது.
இந்த விழாவில் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்சியத்தை அவ தூறாக பேசி வருவதை கண்டித்தும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபடப்போவ தாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியினர் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று (4.10.2023) காலை 9.30 மணியளவில் காட்டுமன் னார் கோவிலில் உள்ள பெரியகுளம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் பிர காஷ் தலைமை தாங் கினார். வட்ட குழு உறுப்பினர்கள் இளங் கோவன், புகழேந்தி மற் றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கருப்பு கொடி ஏந்தியவாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண் டித்து முழுக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 21 பேரை காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின்னர் காலை 11 மணி யளவில் சுவாமி நந்தனார் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இச்சம்பவத் தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.