ஈரோடு,நவ.23- இந்தியாவை காப்பாற்ற பாசிச பாஜவை மக்கள் வீழ்த்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்த முன்னோடிகள், கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளி கள் உள்பட 2,580 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற் கிழி வழங்கும் நிகழ்ச்சி 21.11.2023 அன்று நடந்தது.
அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 2,580 பேருக்கு பொற்கிழி வழங்கி பேசியதாவது:
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினீர்கள். வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அடிமை களின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.
இந்தியா என்ற ஒரு நாடு இருக்க வேண்டும் எனில் ‘இந்தியா’ கூட்டணி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
இந்தியாவை காப்பாற்ற வரு கிற 2024 நாடாளுமன்ற தேர் தலில் பாசிச பாஜ அரசை மக்கள் வீழ்த்தி இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.
இதற்காக, திமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்பதோடு மக்களிடம் இது தொடர்பாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ஈரோடு மாவட் டம் பெருந்துறை சரளையில் திமுக வடக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (22.11.2023) நடை பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டா லின் பங்கேற்று பேசியதாவது:
நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது தான் நமது போராட்டத்திற்கு கிடைக்கும் வெற்றி. இதை மக்க ளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைவரும் கொள்கைக் கூட்டமாக மாற வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.