புதுடில்லி,பிப்.21- கரோனாவின் புதிய வகை யான ‘ஜேஎன்.1’ வகை தொற்று, பல்வேறு நாடுக ளில் பரவி வருகிறது. இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவ தோடு, நோய்த் தடுப்பாற்ற லையும் ஊடுருவுமென கூறப் படுகிறது. கடந்த சில வாரங் களாக ஜே.என்.1 வகை உரு மாறிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம் பித்தது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 105 பேருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண் ணிக்கை 875 ஆக பதிவாகி யுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது. காலை 8 மணி நிலவரப் படி பஞ்சாபில் ஒருவர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
ஜேஎன்.1 வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டவர்கள் 92 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று குணமாகி விடுகின்றனர் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர் களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 105 பேருக்கு கரோனா
Leave a comment