சென்னை,பிப்.21- சென்னை மாநகராட் சிக்கான 2024-_2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது 2024_-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அப்போது பொது சுகாதாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக் கையில்; கத்திவாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் (UPHC) 10 படுக்கை களுடன் மேம்படுத்தப்படும்
113 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு (UPHC) ஜெனரேட்டர் வசதிகள் வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவம் சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்காக மடி கணினியுடன் கூடிய லிசிஞி LCD Projector வழங் கப்படும்.
அனைத்து நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மய்யங்களில் (UHWCs) மின் தடை ஏற்படாமல் இருக்க, மின் இன்வெர்ட்டர்கள் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப் படுத்த கால்நடைகளை பிடிக்கும் பணிக் காக கூடுதலாக தற்காலிக தொழிலாளர்கள் நியமிக்கப்படும்.
சென்னை மாநகராட்சி மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவ அலுவ லர்களுக்கு மருத்துவக் கல்வி (CME) பயிற்சி வழங்கப்படும்.
மண்டலம்-10குட்பட்ட பகுதியில். துணை மருந்துவ பண்டக சாலை அமைக் கப்படும்.
கூடுதலாக 7 நாய் பிடிக்கும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்
நடமாடும் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் 60 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
சென்னை மாநகராட்சி, பொதுசுகா தாரத்துறை தொற்று நோய் மருத்துவ மனையில் ANM மாணவிகளுக்காக புதிய விடுதிக்கான கட்டடம் ரூ.3.00 கோடி செலவில் கட்டப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் மாடுகளை முறைப்படுத்த போதிய இடவசதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுள்ள மாட்டு உரிமையாளர்களின் மாட்டுத் தொழு வங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
சென்னை மாநகராட்சியில், தெருநாய் களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, கூடுதலாக இரண்டு நாய் இனக்கட்டுப் பாட்டு மய்யங்கள் ரூ.2.50 கோடி தோராய மதிப்பீட்டில் துவக்கப்படும்.
கால்வாய்களில் உருவாகும் கொசுப் புழுகளை அழிப்பதற்கு கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிக்கு ரூ.80,000 வீதம் 15 மண்டலங்களுக்கு ரூ.12.00 இலட் சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு மண்டலத் திற்கும் ஒரு Vehicle Mounted Power Sprayer- வுடன் கூடிய துணை கருவிகள் (Accessories) கொள்முதல் செய்து வழங்கப்படும்.
சுகாதாரம், பூச்சி தடுப்பு, மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, போன்ற நோய் தாக்குதலை தடுப்பதற்கும், கொசுக்கள் மற்றும் நோய் பரப்பும் பூச்சிகளின் பெருக்கத்தை குறைக்கவும் / நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும் / கொசுக்களிடம் கொசுக்கொல்லி மற்றும் புகைப்பரப்பும் மருந்துகளின் எதிர்ப்பு சக்தியை கண்டறி வதற்கு செயல்முறை ஆய்வு கூடம் அமைக்கப்படும்.
அடையாறு நகர்ப்புற சமூக சுகாதார மய்யத்தில், சிறப்பான மருத்துவ சேவை அளிக்கப்படுவதால், சிகிச்சை பெறு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இம்மருத்துவமைனையை, மண்டலத்திற்கு அடுத்துள்ள காலி இடத்தில் கூடுதலாக 70 படுக்கைகளுடன், மேம்பட்ட ஆபரேஷன் தியேட்டர் மற்றும் லிப்ட் வசதியுடன் மூன்று தளம் கொண்ட கட்டடம் ரூ.7.00 கோடி செலவில் கட்டப்படும்.
சைதாப்பேட்டை, அவசர சிகிச்சை மய்யத்தை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு, மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான தேவை அதிகரித்து வருவதால், தற்போ துள்ள கட்டடம் போதுமானதாக இல்லாததால், விசாலமான ஆபரேஷன் தியேட்டர், லேபர் ரூம், மகப்பேறுக்குப் பிந்தைய வார்டு, NBSU, அவசர சிகிச்சை மய்யம் ஸ்டோர் அறைகள், காத்திருப்பு கூடம், விரிவான ஆய்வக வசதிகளுடன் கூடுதலாக 70 படுக்கை வசதியுடன், மூன்று தளம் கொண்ட கட்டடமாக ரூ.7.00 கோடி செலவில் கட்டப்படும்.
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் மிக முக்கிய பணிகளை மேற்கொள்ளும் தூய்மை, சுகாதாரம் மற்றும் சாலை பணியாளர்களின் உடல் நலனை பேணி காக்கும் வகையில் அனைத்து நான்காம் நிலை களப்பணி யாளர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மூலம் முழு உடல் பரிசோதனை பெருநகர சென்னை மாநக ராட்சியின் செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அடிப்படை தொழிலா ளர்களின் நலன் காக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் தாய்மார்களுக்கான மகப்பேறு சிறப்பு அழைப்பு மய்யம் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மய்யங்கள் (Early Intervention Center) அமைக்கப்படும்.
தென் சென்னை பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அடைத்து அபராதம் வசூலிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டாரத்தில் புதியதாக ஒரு மாட்டுத்தொழுவம் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி பதினாறு Urban Community Health Centre UCHC மற்றும் மூன்று 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளிலும் Continuous Cardiotocography CTG கருவி ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 2 வீதம் 19வூ2=38 எண்ணிக்கை மொத்த தொகை தோராய மாக ரூ.95.00 லட்சம் மதிப்பீட்டில் TNMSC மூலமாக 2024-2025 ஆம் நிதி ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.