21.2.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* காஞ்சிபுரம் சலவைத் தொழிலாளியின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி.
* வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்த கடந்த 3 நாட்களாக பொறுத்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் மீண்டும் இன்று டில்லி நோக்கி பேரணி செல்வதாக அறிவித்துள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை உறுதியளித்த ராகுல் காந்தி, நாட்டில் தற்போது நிலவும் வெறுப்புக்குக் காரணம் ஏழை, வேலையில்லாதோர், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு தற்போதைய மோடி அரசால் இழைக்கப்படும் அநீதிதான் என இந்தியா யாத்திரையில் லக்னோவில் ராகுல் பேச்சு.
* திருநங்கைகளுக்கு இலவச உயர்கல்வியை உறுதி செய்ய தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ.2 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு.
* கருநாடகா பள்ளிகளில் வகுப்பறை வாசலில் “இது அறிவின் கோயில், கூப்பிய கையோடு வாருங்கள்” என முந்தைய பாஜக அரசு வைத்த வாசகத்தை மாற்றி “இது அறிவுக் கோயில்; பயமின்றி கேள்வி கேள்” என்று வாச கங்கள் அமைக்க சமூக நலத்துறை முடிவு. வழக்கம்போல் பாஜக எதிர்ப்பு.
தி டெலிகிராப்:
* மராத்தியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மகாராஷ்டிரா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
* சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜ வெற்றி ரத்து: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. வாக்குகளை திருத்தி, தேர்தல் தில்லு முல்லில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
தி ஹிந்து:
றீ”சுதந்திர, நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (இவிஎம்கள்) பதிலாக பழைய வாக்குச் சீட்டுகளை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பீகாரில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தேர்தல் ஆணையத்தி டம், வலியுறுத்தியுள்ளது.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment