புதுடில்லி,பிப்.20- ‘இந்தியா’ கூட் டணியில் ஆம் ஆத்மி கட்சி தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில் டில்லியில் (18.2.2024) ஞாயிற்றுக் கிழமை மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் சந்திப்பு அமைந்தது.
டில்லி லோதி எஸ்டேட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநி லங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி இல்லத்தில் மரி யாதை நிமித்தமான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லி கார்ஜுன் கார்கே, டில்லி முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் மாநில மேனாள் முதலமைச்சர் சச்சின் பைலட், டில்லி அமைச்சர் அதிஷி, டில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலை வர் அர்விந்தர் சிங் லவ்லி, அரி யானா மாநில மேனாள் முதல மைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட தலைவர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது, பத்திரிக் கையாளர்களுடனான கலந்துரை யாடலில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய தாவது:
அமலாக்க இயக்குநரகம் என்ற ஒரு துறை இல்லை என்றால் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அனை வரும் ‘இந்தியா’ கூட்டணியில் தான் இருப்பர். பாஜக என்னை கைது செய்ய நினைக்கிறார்கள். நான் கைது செய்யப்பட்டாலும் பரவாயில்லை, அரசியல் எனும் பொது வாழ்க்கையில் கைது என்பது சகஜம் தான்.
எங்களுக்கான காலம் நிச்சயம் வரும். பஞ்சாப்பில் தனித்து போட்டி என்ற முடிவை ஆம் ஆத்மி கட்சி எடுத்துள்ளது.
அரியானா, டில்லி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுட னான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.
பின்னர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லி கார்ஜுன் கார்கே நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அதைத் தொடர்ந்து, ஒரே மேசையில் அமர்ந்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரி வால், மல்லிகார்ஜுன் கார்கே, சச்சின் பைலட், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் உரையாடிக் கொண்டனர்.
அப்போது, பத்திரிகையாளர் கள் ‘இந்தியா’ கூட்டணியின் சூழல் கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். அவற்றுக்குப் பதில ளித்த மல்லிகார்ஜுன் கார்கே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ‘இந்தியா’ கூட்டணியில் ஒரு பயணி தான்.
நினைத்தவுடன் ஏறுவார், இறங் குவார் அவ்வளவு தான். மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததற்கு நாடாளு மன்றத்திலேயே பதிலளித்து விட் டேன்.
சரியான நேரத்தில் முடிவுகளை நீங்கள் அனைவரும் பார்ப்பீர்கள். கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ‘இந்தியா’ கூட்டணி யில் உள்ளதால் தான் ஒரே மேசையில் அமர்ந்துந்துள்ளோம் என்றார் மல்லிகார்ஜுன் கார்கே.
‘இந்தியா’ கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளியேறியதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் வெளியேறும் என தகவல்கள் வெளிவரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மல்லி கார்ஜுன் கார்கே ஆகியோ ரின் இந்தச் சந்திப்பு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்வதை உறுதிப்படுத்தி யுள்ளது.