ராஞ்சி,பிப்.19- ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதி வாரிக் கணக்கெ டுப்பை நடத்துவதற்கான வரைவு அறிக்கையை தயார்செய்ய அம்மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தர விட் டுள்ளார்.
இதுதொடர்பாக பணியாளர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், “விரைவில் வரைவு அறிக்கை தயாரிக் கப்பட்டு மாநில அமைச்ச ரவையின் ஒப்புதல் பெறப் படும். அண்டை மாநிலமான பீகாரில் மேற் கொள்ளப் பட்ட அதே முறையில் ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக் கெடுப்பு நடத்தப்படும். அனைத்தும் திட்டமிட்ட படி நடந்தால், மக்கள வைத் தேர்தலுக்கு பின், கணக் கெடுப்புக்கான பணி தொட ங்கும்’ என தெரிவித்துள்ளார்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண் டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், அதுபற்றி மோடி அரசு வாய்திறக்க மறுத்து வருகிறது. எனினும், பீகார், கருநாடகா, ஆந்திரா, தெலங் கானா வரிசையில் ஜார்க் கண்டும் மாநில அளவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்
சென்னை, பிப்.19 தமிழ்நாட்டில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. அதன் காரணமாக ஒரு சில இடங்களில் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையும், தஞ்சாவூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்தது. ஈரோட்டில் அதிகபட்சமாக நேற்று (18.2.2024) 37 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவியது.
இந்நிலையில்,தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 23ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும்.